Published:Updated:

மதுரை: `மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல்?' - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்!

ஆர்.டி.ஐ மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் வழக்கறிஞர் புகழேந்தி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சிறை கைதிகள் உரிமை மையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சிறை கைதிகள் உரிமை மைய இயக்குநர் வழக்கறிஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்திருக்கும் மனுவில், ``கடந்த 5 வருடங்களில் மதுரை மத்திய சிறையிலிருக்கும் கைதிகள் மூலம் ஸ்டேஷனரி பொருள்களும், மருத்துவப் பொருள்களும் தயாரிக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாகப் போலி பில் தயாரித்து மோசடி நடந்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்றிருக்கும் ஆதாரங்களின்படி, கடந்த 2016 முதல் 2021 வரை நடந்த இந்த முறைகேட்டில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பது தெரிய வருகிறது.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

சிறைக் கைதிகள் மூலம் அதிகமாகப் பொருள்களை உற்பத்தி செய்ததாகவும், அதற்காக அவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுத்ததாகவும், போலிக் கணக்குகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதில், அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி-க்கு தொடர்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஊழல் குறித்து உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த முறைகேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மதுரை மத்திய  சிறை
மதுரை மத்திய சிறை

சில மாதங்களுக்கு முன்பு சிறைச்சாலை பிரச்னைகள் தொடர்பாக விகடனுக்குப் பேட்டியளித்த வழக்கறிஞர் பி.புகழேந்தி, ``மதுரை சிறைச்சாலையில் நடைபெறும் ஊழல் பற்றிப் பல புகார்கள் வருகிறது. அது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் வழக்கு தொடர்வேன்" என்று கூறியிருந்தார்.

தற்போது அவர் கைக்குக் கிடைத்திருக்கும் ஆர்.டி.ஐ ஆதாரங்கள், ஊழல் நடந்திருப்பதை உறுதிப்படுத்துவது போல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை அன்னபூர்ணா ஹோட்டலில் பன்னீர்செல்வம் திடீர் மீட்டிங்; பரபரப்பான அதிமுக வட்டாரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு