Published:Updated:

``நாங்கள் ஒருபோதும் ஒரு துளி கண்ணீரைக்கூட சிந்தப் போவதில்லை" - அஃப்ரீன் பாத்திமா உருக்கம்!

அஃப்ரீன் பாத்திமா

"இனப்படுகொலைகள் அளவுக்கு மிரட்டும் தொனியில் தொலைபேசி அழைப்புகள் வருவதுண்டு. இஸ்லாமியர்களை துன்புறுத்தி இன்பம் அடையும் போக்கு இப்போது வழக்கமாகிவிட்டது." -அஃப்ரீன் பாத்திமா

``நாங்கள் ஒருபோதும் ஒரு துளி கண்ணீரைக்கூட சிந்தப் போவதில்லை" - அஃப்ரீன் பாத்திமா உருக்கம்!

"இனப்படுகொலைகள் அளவுக்கு மிரட்டும் தொனியில் தொலைபேசி அழைப்புகள் வருவதுண்டு. இஸ்லாமியர்களை துன்புறுத்தி இன்பம் அடையும் போக்கு இப்போது வழக்கமாகிவிட்டது." -அஃப்ரீன் பாத்திமா

Published:Updated:
அஃப்ரீன் பாத்திமா
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் வெளியான நுபுர் ஷர்மாவின் சர்ச்சையான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாவத் மொஹம்மது என்பவரின் வீடு அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருப்பதாகக்கூறி சில தினங்களுக்கு முன்னர் புல்டோசரால் இடிக்கப்பட்டது.

ஜாவத்தின் பெயரில் இருக்கும் அந்த வீடு முறையின்றி கட்டப்பட்டு இருக்கிறது என்று மே மாதமே ஜாவத்துக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக உத்தர பிரதேச அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே சமயம், அந்த வீடு ஜாவத்தின் பெயரில் இல்லை என்றும், அது மஹராக கொடுக்கப்பட்ட வீடு என்றும், அது தன் பெயரில் கொடுக்கப்பட்ட வீடு என்றும், அதற்கான தண்ணீர் வரி முதலிய ஆதாரங்களை அடுக்கினார் ஜாவத்தின் மனைவி. ஆனாலும், வீடு இடிக்கப்படுவது வட இந்திய ஊடகங்களில் நேரலையாக வெளியிடப்பட்டது. போராட்டங்களில் ஈடுபட்ட மூன்று பேரின் வீடுகள் இடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இனியும் இது தொடரும் என பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது யோகி ஆதித்யநாத்தின் உத்திர பிரதேச அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இடிக்கப்பட்ட வீடு
இடிக்கப்பட்ட வீடு

இந்நிலையில், மேக்தூப் மீடியாவுக்கு பேட்டியளித்திருக்கிறார் ஜாவத்தின் மூத்த மகள் அஃப்ரீன் பாத்தீமா. இந்தியாவில் சிறுபான்மையினர்கள் ஒடுக்கப்படுவதுகுறித்து தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் ஃபாத்தீமா, இதுகுறித்து பேசுகையில் " என் இளைய சகோதரி அந்த வீட்டில் தான் பிறந்தார். அதனாலேயே , அந்த வீட்டுக்கும் என் இளைய தங்கையின் வயது இருக்கும் என நாங்கள் நினைப்பதுண்டு. அந்த வீடு எங்களின் இடமாக இருந்தது. நாங்கள் நாங்களாகவே அந்த வீட்டில் இருந்தோம். சின்ன சின்ன சண்டைகள் போட்டுக்கொண்டு நிம்மதியாக அந்த வீட்டினுள் இருந்திருக்கிறோம். என் அம்மாவுக்கு செடிகள் வளர்ப்பதில் பயங்கர இஷ்டம். எங்கள் வீடு இடிக்கப்பட்ட போது, அந்த செடிகளும், அவை வைக்கப்பட்டிருந்த மண் சட்டிகளும் நொறுங்குவதைக் கண்டோம். எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட ஐநூறு செடிகள் இப்படியாக வைக்கப்பட்டிருந்தன. வீடு இடிக்கப்பட்ட போது, அவற்றுக்கும் கடினமாகத்தானே இருந்திருக்கும். அந்த செடிகளும் அவர்களை சபித்திருக்கும் என நினைத்து என்னை நானே சாந்தப்படுத்திக்கொள்கிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போதிருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை. அலஹாபாத்தில் எந்தவொரு போராட்டமும் நடைபெறாமல் இருந்திருந்தாலும் என் தந்தையை குற்றம்சாட்டப்பட்டிருப்பார். அலஹாபாத் நகரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அனுதினமும் நடைபெறுவதை தொடர்ந்து சுட்டிக்காட்டியவர்களில் என் தந்தையும் ஒருவர். இனப்படுகொலைகள் அளவுக்கு மிரட்டும் தொனியில் தொலைபேசி அழைப்புகள் வருவதுண்டு.

அஃப்ரீன் ஃபாத்திமா
அஃப்ரீன் ஃபாத்திமா

இஸ்லாமியர்களை துன்புறுத்தி இன்பம் அடையும் போக்கு இப்போது வழக்கமாகிவிட்டது. இந்து ஆதிக்கவாதிகளுக்கு இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பது; இஸ்லாமியர்களை சிறைக்கு அனுப்புவது; இஸ்லாமியர்களை தேசிய ஊடகங்களில் மனிதாபிமாற்று இகழ்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. அதில் அவர்கள் இன்பம் காண்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பதை ஒருநாளும் அவர்களுக்கு நாங்கள் தரப்போவதில்லை. ஆம், நாங்கள் ஒருபோதும் ஒரு துளி கண்ணீரைக்கூட சிந்தப் போவதில்லை. " என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism