Published:Updated:

"சக்திவாய்ந்த தலைவர் இல்லாவிட்டால் அஃப்தாப் போன்றவர்கள் ஒவ்வொரு ஊரிலும் பிறப்பர்!"- அஸ்ஸாம் முதல்வர்

குஜராத் பேரணியில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா

``2024-ல் மூன்றாவது முறையாக மோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவரால் இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்கமுடியும்." - அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா

அண்மையில் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் எதுவென்றால், அஃப்தாப் பூனாவாலா என்பவர் தன் லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தா என்பவரைக் கொலைசெய்து 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல்வேறு இடங்களில் வீசியதுதான். இந்தச் சம்பவத்தில், கைதுசெய்யப்பட்ட அஃப்தாப்பிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு விசாரணையிலும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியான வண்ணமாக இருந்து வருகின்றன.

அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா
அஃப்தாப் அமீன் பூனாவாலா - ஷ்ரத்தா
ட்விட்டர்

இந்த நிலையில், குஜராத்தில் இன்னும் இரண்டுவாரங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பேரணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, ``சமீபத்தில் அஃப்தாப் என்பவர், மும்பையிலிருந்து ஷ்ரத்தா என்ற பெண்ணை அழைத்துவந்து லவ்-ஜிகாத் என்ற பெயரில் 35 துண்டுகளாக வெட்டினார்.

குஜராத் பேரணியில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா
குஜராத் பேரணியில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா

பின்னர் துண்டுகளாக்கப்பட்ட உடலைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தார். உடல் அதிலிருக்கும்போதே வேறொரு பெண்ணை அழைத்துவந்து டேட்டிங்கும் செய்திருக்கிறார். எனவே நாட்டுக்கொரு சக்திவாய்ந்த தலைவரும், நாட்டை தாயாக மதிக்கும் அரசும் கிடைக்காவிட்டால், இப்படிப்பட்ட அஃப்தாப் ஒவ்வொரு ஊரிலும் பிறப்பார். அதோடு நம் சமுதாயத்தையும் பாதுகாக்க முடியாது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ட்விட்டர்

எனவேதான் நாடு, 2024-ல் மூன்றாவது முறையாக மோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவரால் இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்கமுடியும்" என்று கூறினார். அதைத் தொடர்ந்து தற்போது ஹிமந்தா பிஸ்வாவின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகிவருகிறது.