Published:Updated:

``அல் கொய்தா முஸ்லிம்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறது!" - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

``பயங்கரவாத அமைப்பான அல் கொய்தா முஸ்லிம்களைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன." - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

``அல் கொய்தா முஸ்லிம்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறது!" - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

``பயங்கரவாத அமைப்பான அல் கொய்தா முஸ்லிம்களைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன." - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

Published:Updated:
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

நபிகள் நாயகம் குறித்து, பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு சர்வதேச அளவில் இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்திய அரசியல் கட்சித் தலைவர்களும், நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கூறிவருகின்றனர். முன்னதாக இந்த விவகாரத்தில் பா.ஜ.க, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நுபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில், உலகளாவிய பயங்கரவாத அமைப்பாகக் கூறப்படும் அல் கொய்தா, இந்த விவாகரத்தில் பா.ஜ.க தலைவர்களுக்கு தற்கொலைப்படை மிரட்டல் விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக அல் கொய்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவி பயங்கரவாதிகள் இப்போது டெல்லி, மும்பை, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் தங்களின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும். நபியை அவமதித்தவர்களைக் கொல்வோம். அவர்களை தகர்க்க எங்கள் உடல்களிலும், எங்கள் குழந்தைகளின் உடல்களிலும் நாங்கள் வெடிகுண்டுகள் கட்டுவோம். நபியை இழிவுபடுத்தியவர்களை நாங்கள் பழிவாங்கவில்லை என்றால், எங்கள் தாய்மார்கள் எங்களை இழந்து தவிக்கட்டும்" எனக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள்
கோப்புப் படம்

அல் கொய்தாவின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ``பயங்கரவாத அமைப்பான அல் கொய்தா, முஸ்லிம்களின் ஓர் பேரழிவு. அவர்கள் இஸ்லாமியர்களை மீட்பவர்கள் அல்ல. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் முஸ்லிம்களைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. அவர்கள் மனிதகுலத்தின்மீது ரத்தக்களரியில் ஈடுபடுகின்றனர். எனவே இந்தியத் தலைவர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism