Published:Updated:

``நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன்" - சொல்வது கெஜ்ரிவாலுக்கு இரவு விருந்தளித்த ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ ஓட்டுநருடன் கெஜ்ரிவால்

``நான் கெஜ்ரிவாலை இரவு உணவுக்கு அழைத்தேன், ஏனென்றால், எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்." - ஆட்டோ ஓட்டுநர்

``நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன்" - சொல்வது கெஜ்ரிவாலுக்கு இரவு விருந்தளித்த ஆட்டோ ஓட்டுநர்

``நான் கெஜ்ரிவாலை இரவு உணவுக்கு அழைத்தேன், ஏனென்றால், எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்." - ஆட்டோ ஓட்டுநர்

Published:Updated:
ஆட்டோ ஓட்டுநருடன் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் தொடர்ச்சியாகப் பல பேரணிகளை நடத்திவருகிறார். அதோடு இப்போதே தேர்தல் குறித்த இலவச வாக்குறுதிகளையும் அறிவிக்கத் தொடங்கிவிட்டார். இந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கக் கூட்டத்தில் கெஜ்ரிவால் கடந்த மாதம் 12-ம் தேதி கலந்துகொண்டார்.

ஆட்டோ ஓட்டுநருடன் கெஜ்ரிவால்
ஆட்டோ ஓட்டுநருடன் கெஜ்ரிவால்
ட்விட்டர்

அப்போது கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், ``டெல்லியைப்போலவே இங்கிருப்பவர்களும், தங்கள் பயணிகளை ஊக்குவிப்பதன் மூலம் குஜராத்திலும் வெற்றிபெற உதவ வேண்டும்" என ஆட்டோ ஓட்டுநர்களிடம் வலியுறுத்தினார். கெஜ்ரிவாலின் இந்த உரைக்குப் பிறகு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒருவரான விக்ரம் தந்தானி எழுந்து, ``நான் உங்களின் தீவிர ரசிகன். பஞ்சாப்பில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வீட்டில் நீங்கள் இரவு உணவு சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளங்களில் நான் பார்த்தேன். எனவே இன்று இரவு உணவுக்கு எங்கள் வீட்டுக்கும் வருவீர்களா?" என்று கெஜ்ரிவாலிடம் கேட்டார்.

அதைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தந்தானியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கெஜ்ரிவால், இரவு உணவுக்கு தன்னை ஆட்டோவில் வந்து அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அன்று இரவு அந்த ஆட்டோ ஓட்டுநரின் இல்லத்தில் அவர் உணவருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுநர்
ட்விட்டர்

இந்த நிலையில், குஜராத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க பேரணி ஒன்றில், கெஜ்ரிவாலை இரவு உணவுக்கு அழைத்த ஆட்டோ டிரைவர் விக்ரம் தந்தானி கலந்துகொண்டார். அவரைக் கண்டுகொண்ட பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், " நான் கெஜ்ரிவாலை இரவு உணவுக்கு அழைத்தேன், ஏனென்றால், எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். எனது வீட்டில் அவருக்கு விருந்து அளிக்க நான் முன்வந்தவுடன், கெஜ்ரிவால் அதை ஏற்றுக்கொண்டார்.

ஆட்டோ ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுநர்
ட்விட்டர்

இது இவ்வளவு பெரிய அளவில் மக்களிடம் பகிரப்படும் என எனக்குத் தெரியாது. மற்றபடி, நான் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை. நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என்பதால் இங்கு பேரணிக்கு வந்தேன். நான் ஆரம்பம் முதல் பா.ஜ.க-வில் இருந்துவருகிறேன். கடந்தகாலங்களில் எப்போதும் பா.ஜ.க-வுக்கு எனது வாக்கை அளித்திருக்கிறேன். இதை நான் எந்தக் கட்டாயத்திலும் கூறவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.