Published:Updated:

தொடர் கொலைகள், ரெளடிகள் மோதல்: உத்தரவிட்ட ஸ்டாலின்... விரைந்த டி.ஜி.பி சைலேந்திர பாபு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டி.ஜி.பி சைலேந்திர பாபு! - ஸ்டாலின்
டி.ஜி.பி சைலேந்திர பாபு! - ஸ்டாலின்

டி.ஜி.பி சைலேந்திர பாபுவை அழைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது தென் மாவட்டங்களில் அதிக அளவில் பழிக்குப் பழிச் சம்பவங்கள் நடைபெறுவது சுட்டிக்காட்டப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகக் குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று, செய்தியாகின. பழிக்குப் பழி கொலை, கஞ்சா விற்பதில் மோதல் எனப் பல்வேறு காரணங்களுக்கு தொடர் கொலைச் சம்பவங்களும், மோதல் சம்பவங்களும் அரங்கேறின. இதைத் தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் ரெளடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர் காவல்துறையினர்.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் கடந்த செப். 23-ம் தேதி இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Stroming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 450 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 181 பேர் நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியானையின்படி கைதானார்கள். கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 420 நபர்களிடமிருந்து நன்னடத்தைக்காகப் பிணை ஆணை பெறப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றங்களில் ஈடுபடும் ரெளடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதற்கிடையே டி.ஜி.பி சைலேந்திர பாபுவை அழைத்து தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது தென் மாவட்டங்களில் அதிக அளவில் பழிக்குப் பழிச் சம்பவங்கள் நடைபெறுவது சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது, பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. மதுரையிலும் ரெளடிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்துக் கொலை! - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் சைலேந்திர பாபு இன்று தென் மாவட்டங்களுக்கு விசிட் செய்கிறார். இன்று மதுரையில் காவல்துறையின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் மூலம் ரெளடிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கை தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு