Published:Updated:

``சொந்த தொகுதியில் ஜெயிக்கமுடியாத ராகுல், எங்கள் லட்சியத்தைக் கேலி செய்வதா?" - தெலங்கானா அமைச்சர்

கே.டி.ராமராவ் - ராகுல் காந்தி

``பி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையே எந்தவிதமான உறவும் இல்லை. அவர்களுடன் எப்போதும் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை." - ராகுல் காந்தி

``சொந்த தொகுதியில் ஜெயிக்கமுடியாத ராகுல், எங்கள் லட்சியத்தைக் கேலி செய்வதா?" - தெலங்கானா அமைச்சர்

``பி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையே எந்தவிதமான உறவும் இல்லை. அவர்களுடன் எப்போதும் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை." - ராகுல் காந்தி

Published:Updated:
கே.டி.ராமராவ் - ராகுல் காந்தி

தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், 2024 லோக் சபா தேர்தலை எதிர்நோக்கி, பா.ஜ.-கவை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்துடனும், அதேசமயம் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க காங்கிரஸ் அல்லாத ஓர் அணியைத் திரட்டவும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். அத்தகைய முயற்சியின் ஒருபகுதியாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மாநில கட்சியாக இருந்த தன்னுடைய `தெலங்கானா ராஷ்டிர சமிதி' கட்சியை, `பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்)' என தேசிய கட்சியாக அறிவித்திருந்தார்.

கே.சி.ஆர் - ராகுல் காந்தி
கே.சி.ஆர் - ராகுல் காந்தி

இந்த நிலையில், தெலங்கானாவில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, ``தெலங்கானா முதல்வர், சர்வதேச கட்சியை உருவாக்கி சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தேர்தலில் போட்டியிட விரும்பினாலும் பரவாயில்லை. காங்கிரஸ் சித்தாந்தத்தால் மட்டுமே பா.ஜ.க-வின் சித்தாந்தத்தைத் தோற்கடிக்க முடியும். பி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையே எந்தவிதமான உறவும் இல்லை. அவர்களுடன் எப்போதும் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்லாமல், பி.ஆர்.எஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்" என நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

கே.டி.ராமராவ்
கே.டி.ராமராவ்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து தற்போது தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ், ராகுலை விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக கே.டி.ராமராவ் தன் ட்விட்டரில், ``தன்னுடைய சொந்த நாடாளுமன்றத் தொகுதியான அமேதியில் வெற்றிபெற முடியாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் கே.சி.ஆரின் தேசிய கட்சி லட்சியத்தைக் கேலி செய்கிறார். அவர் பிரதமராக வேண்டுமானால், முதலில் அவரை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கத் தன்னுடைய மக்களைச் சமாதானப்படுத்தவேண்டும்" என ராகுலைக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.