Published:Updated:

``பச்சோந்தியைவிட அதிகமாக நிறம் மாறுபவர் ஓபிஎஸ்!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு

எடப்பாடி பழனிசாமி

``அவருக்குச் சாதகமாக எது இருக்கிறதோ, அதற்குத் தகுந்த மாதிரி மாத்திக்குவாரு. பச்சோந்தியைவிட அதிகமா கலர் மாறுவார் அவர்." - இ.பி.எஸ்

``பச்சோந்தியைவிட அதிகமாக நிறம் மாறுபவர் ஓபிஎஸ்!" - எடப்பாடி பழனிசாமி தாக்கு

``அவருக்குச் சாதகமாக எது இருக்கிறதோ, அதற்குத் தகுந்த மாதிரி மாத்திக்குவாரு. பச்சோந்தியைவிட அதிகமா கலர் மாறுவார் அவர்." - இ.பி.எஸ்

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பினர், கட்சித் தலைமை தொடர்பாக மாறி மாறி நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்துவருகின்றனர். அந்த வரிசையில், அ.தி.மு.க அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது தெடர்பாக, நீதிமன்ற உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் அ.தி.மு.க அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதையடுத்து இன்று அ.தி.மு.க அலுவலகத்துக்கு வருகை தந்த இ.பி.எஸ்., அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய இ.பி.எஸ்., ``11-07-22 அன்று கழக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், ஒருசிலர் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, பல்வேறு பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். கழகத்துக்குச் சொந்தமான பத்திரங்களெல்லாம் தலைமைக் கழகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் திருடிச் சென்றிருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும்விதத்தில் செயல்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டும், இந்த விடியா தி.மு.க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

அதோடு நாங்கள் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றமும், விரைவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அப்போதும் அதைக் கிடப்பில் போட்டார்கள். மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு, அதன்படி நேற்றைய தினம்தான் சி.பி.சி.ஐ.டி வந்து தடயங்களைச் சேகரித்துவிட்டுச் சென்றிருக்கிறது. எங்களுடைய கட்சி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டு, பொருள்கள் திருடப்பட நாங்கள் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால், இந்த தி.மு.க விடியா அரசில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்குலைந்திருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எப்போதெல்லாம் சோதனை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தொண்டர்களின் ஆதரவோடு அ.தி.மு.க சோதனைகளை வென்று சாதனை படைத்திருக்கிறது. ஆகவே, அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்றிணைந்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். அதுதான் நம்முடைய சபதம்... லட்சியம். அ.தி.மு.க-வில் பிளவு என்பதே கிடையாது. ஒருசிலர் கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்று பேசினார்.

எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம்

மேலும், ஓ.பி.எஸ் தரப்பு மன்னிப்புக் கேட்டு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இ.பி.எஸ், ``மன்னிப்புக் கேட்டால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்... கட்சியில் உயர்ந்த பொறுப்பு வகிக்கின்ற ஒருவரே, கொள்ளைக் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிற மாதிரி ரௌடிகளோடு வந்து, அலுவலகத்தின் கேட்டை பலர் காலால் எட்டி உதைக்கிற காட்சிகளை தொலைக்காட்சிகளிலெல்லாம் காட்டினீர்கள். இப்படிப்பட்டவர்களை எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள்... ஆகவே தொண்டர்களுக்குத்தான் இந்தக் கட்சியே தவிர, தலைவருக்கு அல்ல. அதோடு, அவருக்குச் சாதகமாக எது இருக்கிறதோ, அதற்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்வார். பச்சோந்தியைவிட அதிகமாக நிறம் மாறுவார் அவர்" என்று கூறினார்.