Published:Updated:

பேரறிவாளன் விடுதலை: ``திமுக-வைப் பொறுத்தவரை காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" - அண்ணாமலை

அண்ணாமலை

பேரறிவாளன் விடுதலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க ஏற்கிறது எனக் கூறியிருந்த அண்ணாமலை, ``பேரறிவாளன் விடுதலை, திமுக-வைப் பொறுத்தவரை காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" என விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை: ``திமுக-வைப் பொறுத்தவரை காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" - அண்ணாமலை

பேரறிவாளன் விடுதலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க ஏற்கிறது எனக் கூறியிருந்த அண்ணாமலை, ``பேரறிவாளன் விடுதலை, திமுக-வைப் பொறுத்தவரை காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" என விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Published:Updated:
அண்ணாமலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ஐ பயன்படுத்தி நேற்று விடுதலை செய்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறையிலிருக்கும் மற்ற ஆறு பேரையும் விடுவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றன.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க ஏற்கிறது எனக் கூறியிருந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``பேரறிவாளன் விடுதலை, திமுக-வைப் பொறுத்தவரை காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" என தி.மு.க-வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக அறிக்கை
பாஜக அறிக்கை

இந்த அறிக்கையில், ``இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும், நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள்தான் மிகப்பெரிய நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் வழங்கிக்கொண்டிருக்கின்றன. மாநில அரசின் உரிமைகளிலோ ஆளுநரின் அதிகாரங்களிலோ, தமிழக அரசைத் தவிர, நீதிமன்றங்களுக்கும் அல்லது மத்திய அரசுக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. நீதியரசர் நாகேஸ்வரராவ் அவர்கள், முன்னர் விசாரணையின்போது கேட்ட விளக்கங்களையெல்லாம் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்த கண்டனங்கள்போல, முதல்வர் தன் அறிக்கையில் பசப்பியுள்ள கருத்துகளில் துளியும் உண்மையில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின் - அண்ணாமலை
ஸ்டாலின் - அண்ணாமலை

மரணங்களில் அரசியல் செய்யும் மாநிலக் கட்சிகள் இதையும் அரசியலாக்க முயல்வதில் வியப்பில்லை . அப்படி மத்திய, மாநில உரிமைகளைப் பற்றிய பெரிய புரிதல் இருப்பவர்கள் மத்திய அரசில் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிலும் திமுகவின் ஆட்சிதானே இருந்தது... 2006 முதல் 2011 வரை கலைஞர்தானே முதலமைச்சர்... கருணாநிதிக்குப் பேரறிவாளன் விடுதலையில் உடன்பாடு இல்லையா அல்லது கலைஞரைவிட தான் அரசியல் வித்தகம் மிக்கவர் என்று ஸ்டாலின் நினைக்கிறாரா... பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டம் 142-ன்படி தன் உச்சபட்ச சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. திமுக-வைப் பொறுத்தவரை காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது" எனக் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism