Published:Updated:

``பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் தயாராக இருக்கிறோம்!” - இமாச்சல் முதல்வர் ஜெய்ராம்

இமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம்

இமாச்சலப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆய்வு நடப்பதாகவும், அதை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக அந்த மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 

``பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் தயாராக இருக்கிறோம்!” - இமாச்சல் முதல்வர் ஜெய்ராம்

இமாச்சலப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஆய்வு நடப்பதாகவும், அதை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக அந்த மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 

Published:Updated:
இமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம்

பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தன. 

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்

இது தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் முன்னதாக, "பொது சிவில் சட்டம் ஒரு நல்ல நடவடிக்கை. அதை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுவருகிறது" எனக் குறிப்பிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, "இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமைக்க மத்திய அரசு முயலும்.

அனைவரும் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை வரவேற்க வேண்டும். உத்தரப்பிரதேச அரசும் இந்தத் திசையில்தான் சிந்திக்கிறது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், உத்தரப்பிரதேச மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு இது அவசியம். பாஜக-வின் முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர்
இமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர்
ட்விட்டர்

இந்த நிலையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக இமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "மாநில அரசு பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் அவரச முடிவெடுக்க மாட்டோம். தொடர்ந்து ஆராய்ந்து அதன் பின் முடிவெடுப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism