Published:Updated:

குஜராத்: `பாஜக-வை எதிர்க்க ஆளில்லாததால் போட்டி' - எதிரெதிராக ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்

ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை, மகன் - குஜராத் தேர்தல்

``ஆளும் பா.ஜ.க-வை எதிர்கொள்ள வேறு யாரும் இல்லாததால், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும்." - பாரதிய பழங்குடியினர் கட்சி நிறுவனர் சோட்டு வாசவா

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடந்துமுடிந்திருக்கும் நிலையில், தற்போது குஜராத்தில் வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குறிவைத்திருக்கின்றன. இந்த நிலையில், குஜராத்தில் பழங்குடி மக்களின் ஆதரவுடன் இருக்கும் பாரதிய பழங்குடியினர் கட்சியைச் (பிடிபி) சேர்ந்த தந்தை-மகன் இருவரும், பா.ஜ.க-வை எதிர்க்க ஆளில்லாததால் போட்டியிட வேண்டும் என்று ஒரே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

பாஜக
பாஜக

இதில், தொடர்ந்து ஏழு முறை சட்டமன்றத்தில் பட்டியல் பழங்குடியினர் (ST) தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, பி.டி.பி கட்சியின் நிறுவனர் சோட்டு வாசவா, குஜராத்தின் ஜகாடியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். மேலும் பி.டி.பி கட்சியின் தேசியத் தலைவரும், சோட்டு வாசவாவின் மகனுமான மகேஷ் வாசவா, கட்சியின் சார்பில் அதிகாரபூர்வ வேட்பாளராக அதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை,மகன் - குஜராத் தேர்தல்
ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை,மகன் - குஜராத் தேர்தல்

பின்னர் இது குறித்துப் பேசிய பி.டி.பி கட்சியின் நிறுவனர் சோட்டு வாசவா, ``ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு இடங்களில் போட்டியிடலாம். எனவே, ஆளும் பா.ஜ.க-வை எதிர்கொள்ள வேறு யாரும் இல்லாததால், தேர்தலில் போட்டியிட வேண்டும். நாட்டிலோ அல்லது குஜராத்திலோ பா.ஜ.க வெற்றிபெறப் போவதில்லை. என் வெற்றியின் மீது நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

2017-ல் காங்கிரஸுடன் கூட்டணிவைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட பி.டி.பி கட்சியில், தந்தை, மகன் இருவர் மட்டும் வெற்றிபெற்றனர். பின்னாளில், காங்கிரஸுடனான கூட்டணியிலிருந்து பி.டி.பி விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.