Published:Updated:

``அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறும் எண்ணமே கிடையாது..!' - அஜித் தோவல் திட்டவட்டம்

அஜித் தோவல் ( ட்விட்டர் )

`அக்னிபத் திட்டத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இது ஒரு தனியான திட்டம் அல்ல' என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார்.

``அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறும் எண்ணமே கிடையாது..!' - அஜித் தோவல் திட்டவட்டம்

`அக்னிபத் திட்டத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இது ஒரு தனியான திட்டம் அல்ல' என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அஜித் தோவல் ( ட்விட்டர் )

இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் , நான்கு ஆண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களில், 25 சதவிகிதம் பேர் மட்டுமே நேரடியாக இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம்
ட்விட்டர்

இந்த நிலையில், இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்.எஸ்.ஏ) அஜித் தோவல் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ``அக்னிபத் திட்டத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இது ஒரு தனி திட்டம் அல்ல. அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறும் எண்ணமே கிடையாது. மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவை எப்படி வலிமையாக்குவது என்பதுதான் பிரதமர் மோடியின் முன்னுரிமைகளில் ஒன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஜித் தோவல்
அஜித் தோவல்
ட்விட்டர்

இளைஞர்கள் நாட்டின்மீது நம்பிக்கை கொண்டு பணியாற்றுங்கள். இளைஞர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. ஆனால் வன்முறை, கலவரம் ஏற்படுத்துவதை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism