Published:Updated:

அக்னிபத்: ``சட்டவிரோதமான இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றத்தில் மனு

உச்ச நீதிமன்றம்

"அக்னிபத் திட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்கவிருக்கிறேன்" என அஜய் மக்கன் தெரிவித்திருக்கிறார்.

அக்னிபத்: ``சட்டவிரோதமான இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றத்தில் மனு

"அக்னிபத் திட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்கவிருக்கிறேன்" என அஜய் மக்கன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்து பேருந்துகள், ரயில்கள் என பொதுச்சொத்துகள் தீயில் சேதமாகின. இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்த, குடியரசுத் தலைவரைச் சந்திக்கவிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கன் தகவல் தெரிவித்திருக்கிறார்.

அக்னிபத் - ராணுவ ஆள்சேர்ப்பு
அக்னிபத் - ராணுவ ஆள்சேர்ப்பு

இந்த நிலையில், வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாகவும், நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமலும், எந்த அறிவிப்பு இன்றியும், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா பின்பற்றும் ராணுவத் தேர்வு முறையை ரத்து செய்து, நாட்டில் தடை செய்யப்பட்ட அக்னிவீர் திட்டத்தைத் திணித்துள்ளது. மேலும், இந்த திட்டத்துக்கு ஜூன் முதல் ஆள் சேர்க்க தொடங்குவதாக அறிவித்துள்ளது. எனவே, சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான இந்த திட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" எனத் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism