Published:Updated:

அக்னிபத் திட்டம்: ``20 கோடி இளைஞர்களுக்கு மோடி செய்யும் தெளிவான துரோகம்” - ஆம் ஆத்மி விமர்சனம்

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ( twitter )

``அக்னிபத் திட்டம் என்பது, 20 கோடி இளைஞர்களுக்கு மோடி செய்யும் தெளிவான துரோகம். இந்தத் திட்டத்தின் மூலம், மத்திய அரசு இளைஞர்களின் முதுகில் குத்தியிருக்கிறது." - ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

அக்னிபத் திட்டம்: ``20 கோடி இளைஞர்களுக்கு மோடி செய்யும் தெளிவான துரோகம்” - ஆம் ஆத்மி விமர்சனம்

``அக்னிபத் திட்டம் என்பது, 20 கோடி இளைஞர்களுக்கு மோடி செய்யும் தெளிவான துரோகம். இந்தத் திட்டத்தின் மூலம், மத்திய அரசு இளைஞர்களின் முதுகில் குத்தியிருக்கிறது." - ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

Published:Updated:
ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ( twitter )

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி கடந்த செவ்வாயன்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்திய `அக்னிபத்' எனும் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகளும் எழுகின்றன. இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.பி-யான சஞ்சய் சிங், இந்தத் திட்டம் குறித்து பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் சாடியிருக்கிறார்.

இது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய சஞ்சய் சிங், ``அக்னிபத் திட்டத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, இளைஞர்கள் அனைவரும் விழித்தெழுந்து, ஜனநாயக முறையில் குரலெழுப்ப வேண்டும். இந்தத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுக்காலப் பணிக்குப் பிறகு விடுபடுவார்கள் எனப் பலரும் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், அக்னிபத் திட்டம் என்பது, 20 கோடி இளைஞர்களுக்கு மோடி செய்யும் தெளிவான துரோகம். இந்தத் திட்டத்தின் மூலம், மத்திய அரசு இளைஞர்களின் முதுகில் குத்தியிருக்கிறது.

அக்னிபத் - புதிய ஆள்சேர்ப்பு திட்டம்
அக்னிபத் - புதிய ஆள்சேர்ப்பு திட்டம்

ஆயுதப்படையில் மத்திய அரசு ஆள்சேர்ப்பு தொடங்கும் என எதிர்பார்த்திருந்த இளைஞர்களுக்கு இந்தத் திட்டம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் நிலையில், தற்போது நாடு தழுவிய அளவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது" எனக் கூறினார்.

மேலும் இந்த வீடியோவில் பேசிய சஞ்சய் சிங், ``அக்னிபத் திட்டத்தின் கீழ் நான்கு வருட பணிக்குப் பிறகு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இரண்டு சூழ்நிலைகளை மட்டுமே எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஒன்று வேலையின்மை காரணமாக நீங்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் அல்லது ஏதேனும் தனியார் நிறுவனங்களில் காவலாளி வேலையைத் தேடுவீர்கள். எனவே நாட்டின் இளைஞர்களாகிய உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், உங்களின் உரிமைகளுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். நாட்டில் ஜனநாயக முறையில் குரலெழுப்ப உங்களுக்கு உரிமை உள்ளது. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். ஓராண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு விவசாயிகள் முன்பு மத்திய அரசு செய்ததுபோல, உங்கள் முன் இந்த அரசு குனிய வேண்டும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism