Published:Updated:

அக்னிபத் தொடர்பான வழக்குகள் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பது ஏன்?!

அக்னிபத் - ராணுவ ஆள்சேர்ப்பு

அக்னிபத் திட்டம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்திலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

அக்னிபத் தொடர்பான வழக்குகள் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பது ஏன்?!

அக்னிபத் திட்டம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்திலிருந்து டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

Published:Updated:
அக்னிபத் - ராணுவ ஆள்சேர்ப்பு

அக்னிபத் திட்டம்

சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாக பணிபுரியும் அக்னிபத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்படி, இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள்வரை மட்டுமே பணிபுரிய இயலும். இந்தத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. வட மாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் பெட்டிகளுக்குத் தீ வைத்தனர். இந்த நிலையிலும், அக்னிபத் திட்டம் மூலமாக இந்திய விமானப் படைக்கு ஆள் சேர்க்கும் பணிகள் தொடங்கின.

அக்னிபத்
அக்னிபத்

இந்தத் திட்டத்தின் மூலம் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை ரத்துசெய்யவும், நடைபெற்ற வன்முறையில் அரசு சொத்துகள் சேதமடைவதைக் கண்காணிக்கச் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கவும், இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் விஷால் தீவாரி, எம்.எல்.ஷர்மா, ஹர்ஷ் அஜய்சிங் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாற்றப்பட்ட வழக்குகள்:

இதேபோல, நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அக்னிபத் திட்டம் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்த விசாரணை சமீபத்தில், நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ``அக்னிபத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகின்றன" என்றனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், ``இந்த மனுக்கள் குறித்த விசாரணையை முதலில் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து உத்தரவிடட்டும். அந்த உத்தரவில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்" என்று தெரிவித்திருந்தனர். இதன் மூலம், அக்னிபத் திட்டம் தொடர்பாக இனி யார் வழக்கு தொடர்ந்தாலும் அவர்கள் டெல்லி உயர்நீதி மன்றத்தை மட்டுமே அணுக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருக்கும் ஒருவர் அக்னிபத் தொடர்பாக வழக்கு தொடர டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும் என்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிராஜுதீனிடம் பேசினோம். ``பொதுவாக ஒரு சம்பவம் தொடர்பாக ஒரு முதல் தகவலறிக்கை மட்டுமே பதிய முடியும். அதே சம்பவம் தொடர்பாகப் பின்னாளில் யாரேனும் வழக்கு தொடர்ந்தால் அவர்கள் அந்த வழக்கில் சாட்சியங்களாகத்தான் இணைக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில், மாநிலம் முழுவதுமிருந்து பல்வேறு வழக்குகள் பதியப்படுகின்றன. பல மாநில உயர் நீதிமன்றங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கறிஞர் சிராஜுதீன்
வழக்கறிஞர் சிராஜுதீன்

இத்தனை மனுக்கள் வந்தால் எப்படி நீதிமன்றம் விசாரணையை நடத்த முடியும்... அதனால்தான், அனைத்து வழக்குகளும் ஒரே இடத்துக்கு மாற்றப்பட்டு. டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணையை மேற்கொள்ளும் என்று உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எது சரி, எது தவறு என்று வழக்குகள் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணை மேற்கொள்ளும்" என்று கூறினார்.