Published:Updated:

``அக்னிபத் நாட்டை பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதத்தை நோக்கி நகர்த்தும்" - ராஜஸ்தான் அமைச்சர்

ராஜஸ்தான் அமைச்சர் ராம்லால் ஜாட் ( ட்விட்டர் )

`எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் ஓராண்டு பணியாற்றிய பின்னரே ஓய்வூதியம் பெற முடியும் என்ற நிலையில், அக்னிவீரர்களுக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கக்கூடாது?' - ராஜஸ்தானின் வருவாய்த்துறை அமைச்சர் ராம் லால் ஜாட்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாக பணிபுரியும் அக்னிபத் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். இந்த திட்டத்தின்படி, இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள்வரை மட்டுமே பணிபுரிய முடியும். பாதுகாப்புப்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றும் அக்னி வீரர்களில் தேவைக்கேற்ப 25 சதவிகிதம் பேர் மட்டும் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவிகித வீரர்களுக்கும் 4 ஆண்டுகளில் பணி நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்துக்கு எதிராக டெல்லி, உத்தரபிரதேசம் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கிய போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

பீகாரில் ரயில் மறியல்
பீகாரில் ரயில் மறியல்

இந்தநிலையில், இது தொடர்பாக ராஜஸ்தானின் வருவாய்த்துறை அமைச்சர் ராம்லால் ஜாட் தெரிவித்திருப்பதாவது, ``எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் ஓராண்டு பணியாற்றிய பின்னரே ஓய்வூதியம் பெற முடியும் என்ற நிலையில், அக்னிவீரர்களுக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கக்கூடாது? அக்னிபத் திட்டத்தின் கீழ் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவார்கள்.

இளைஞர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் கொடுங்கள். அக்னிபத் திட்டம் நாட்டை பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதத்தை நோக்கி நகர்த்தும். மேலும் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை உருவாக்கும். இந்த திட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டு பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள். இளைஞர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். உதய்பூரில் கன்ஹையா லால் படுகொலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!