Published:Updated:

தீபாவளி: 7 நாள்கள்... போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் கிடையாது! - எந்த மாநிலத்தில் தெரியுமா?!

போக்குவரத்து விதிமீறல் ( மாதிரி படம் )

அக்டோபர் 21 முதல் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அறிவித்திருக்கிறார்.

பொதுவாக பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது இயல்பை விட, அதிகமாகவே இருக்கும். இந்தியா அளவில் கொண்டாடப்படும், தீபாவளி போன்ற பண்டிகையின்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதென்பது காவலர்களுக்கு பெரும் சவாலான விஷயம்.

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்
அபராதம்

அதேசமயம், இதுபோன்ற நேரங்களில் போக்குவரத்து விதிமீறல்களும், அபராதம் செலுத்துவதும் அதிகளவில் நடக்கும்.

இந்த நிலையில், குஜராத்தில்,``அக்டோபர் 21 முதல் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது" என குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அறிவித்திருக்கிறார்.

குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி
குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி

மேலும் இது மக்களின் சார்பாக, முதல்வர் பூபேந்திர படேல் எடுத்த முடிவு என்றும் ஹர்ஷ் சங்கவி கூறியிருக்கிறார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் அவர் வெளியிட்ட வீடியோவில், ``அரசின் இந்த முடிவை சட்டத்தை மீறுவதற்குப் பயன்படுத்த வேண்டாம். அப்படி ஒருவேளை யாரேனும் விதிமுறைகளை மீறினால், குஜராத் போலீஸார் அவர்களுக்குப் பூக்கள் கொடுத்து போக்குவரத்து சட்டத்தை வலியுறுத்துவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.