Published:Updated:

பிரதமர் மோடியின் தாயாருக்கு 100 வயது; சாலைக்குப் பெயர் சூட்டிய குஜராத் அரசு!

மோடி - அவர் தாயார்

குஜராத் மாநிலத் தலைநகரின் ரேசன் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு `பூஜ்யா ஹிராபா மார்க்' என்று பெயரிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடியின் தாயாருக்கு 100 வயது; சாலைக்குப் பெயர் சூட்டிய குஜராத் அரசு!

குஜராத் மாநிலத் தலைநகரின் ரேசன் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு `பூஜ்யா ஹிராபா மார்க்' என்று பெயரிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
மோடி - அவர் தாயார்

குஜராத்தின் காந்தி நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தெருவுக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் பெயர் சூட்டப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காந்தி நகர் மேயர் ஹிதேஷ் மக்வானா, ``இந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி 100 வயதை எட்டவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயரை என்றென்றும் நிலைநிறுத்தவும், அவரது வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது. வருங்கால சந்ததியினர் துறவு, தவம், சேவை, மனசாட்சி ஆகியவற்றைப் பற்றி அவரிடமிருந்து பாடம் கற்க காந்தி நகரில் உள்ள சாலைக்கு அவர் பெயரைச் சூட்ட முடிவு செய்திருக்கிறோம்.

எனவே, மக்களின் கோரிக்கையையும், உணர்வுகளையும் கருத்தில்கொண்டு குஜராத் மாநிலத் தலைநகரின் ரேசன் பகுதியில் உள்ள 80 மீட்டர் சாலைக்கு `பூஜ்யா ஹிராபா மார்க்' என்று பெயரிட முடிவு செய்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

மோடி - அவர் தாயார் ஹிராபா
மோடி - அவர் தாயார் ஹிராபா
ட்விட்டர்

பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா காந்தி நகரின் புறநகரில் உள்ள ரேசன் கிராமத்தில் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். பா.ஜ.க கட்டுப்பாட்டில் உள்ள காந்தி நகர் மாநகராட்சி இந்தப் பகுதியை நிர்வகிக்கிறது. தன் தாயாரின் பிறந்த நாளான ஜூன் 18-ம் தேதி பிரதமர் மோடி அவரைச் சந்திக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாள் பயணமாகக் குஜராத் செல்லும் மோடி, பவாகத் கோயிலுக்குச் சென்று வதோதரா பேரணியில் பேசுகிறார். அன்றைய தினம், அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் கோயிலில் மோடி குடும்பத்தினர் 'பண்டாரோ' (அன்னதானம்) நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், வாட்நகரில் உள்ள ஹட்கேஷ்வர் மகாதேவ் கோயில் நிர்வாகம், பிரதமர் தாயார் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு மத நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism