Published:Updated:

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... மொத்தம் 49 இடங்களில் ரெய்டு!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிந்து சோதனை நடத்திவருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... மொத்தம் 49 இடங்களில் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிந்து சோதனை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க திருவாரூர் மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் காமராஜ். இவர் 2015 முதல் 2021 -ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவர்மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிந்திருக்கிறது.

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

அவரது வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் இன்று அதிகாலை முதலே தீவிர சோதனை நடத்திவருகின்றனர். மேலும் முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் உள்ளிட்ட ஆறு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் காமராஜரின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், அவர்களின் தொடர்பில் உள்ளவர்கள் என இந்தச் சோதனை நீண்டிருக்கிறது.

மன்னார்குடி தெற்கு வீதியிலுள்ள ஆர்.காமராஜ் வீடு, அவருடைய அக்கா மகன் ஆர்.ஜி.குமார் வீடு, நன்னிலத்திலுள்ள வீடு, உறவினரான வழக்கறிஞர் உதயகுமார் வீடு, மன்னை கிருஷ்ணமூர்த்தி வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதில் ஆர்.காமராஜ் வீட்டின் முன்பு அதிமுக-வினர் கூடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவருகிறார்கள்.

தஞ்சாவூர் பூக்காரத் தெருவிலுள்ள ஆர்.காமராஜ் சம்பந்தி டாக்டர் மோகன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!