Published:Updated:

``கொடநாடு வழக்கில் எடப்பாடி விரைந்து செயல்பட்டார்; மருது அழகுராஜ் ஓபிஎஸ் பக்கம்" - ஜெயக்குமார்

ஜெயக்குமார் ( ஜெயக்குமார் )

`கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி விரைந்து செயல்பட்டார்' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

``கொடநாடு வழக்கில் எடப்பாடி விரைந்து செயல்பட்டார்; மருது அழகுராஜ் ஓபிஎஸ் பக்கம்" - ஜெயக்குமார்

`கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி விரைந்து செயல்பட்டார்' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஜெயக்குமார் ( ஜெயக்குமார் )

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையே அதிமுக-வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார் மருது அழகுராஜ். மேலும் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தைத் திட்டமிட்டு அவமானப்படுத்தியதாகக் குற்றம்சாட்டிவருகிறார்.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``நமது அம்மா பத்திரிகையில் முறைகேடு செய்து அதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்து விலக்கிவைக்கப்பட்டவர் மருது அழகுராஜ். இன்று அவர் ஓபிஎஸ்-ஸின் பக்கம் சாய்ந்துகொண்டு கட்சியின் மீது ஒரு களங்கத்தைச் சுமத்தியிருக்கிறார். பொதுக்குழு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளின்படி சட்ட திட்ட விதிகளின்படி நடைபெற்றது.

மருது அழகுராஜ்
மருது அழகுராஜ்

எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமைக்கு தலைமை தாங்க வேண்டும் என ஒருமித்த குரல் அந்தப் பொதுக்குழுவில் எதிரொலித்தது. பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையிலும், கொச்சைப்படுத்தும் வகையிலும் அவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும் மருது அழகுராஜ் அன்றைக்குப் பேட்டி அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அனைத்து அதிமுக உறுப்பினர்களையும் கொதித்தெழச் செய்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களில் நடந்த கொடநாடு சம்பவம் குறித்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டார். மேலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினார். டி.டி.வி.தினகரனை மறைமுகமாக ஓபிஎஸ் சந்தித்தது குறித்து மருது அழகுராஜ் சொல்லாதது ஏன்?

கருணாநிதி என்பவர் தீயசக்தி. அந்த தீயசக்தி எந்த நிலையிலும் தலைதூக்கிவிடக் கூடாது என்று வாழ்நாள் முழுவதும் திமுக எதிர்ப்பு கொள்கையை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றினார்கள். டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள்... அதிமுக-வின் ஒரே நிலைப்பாடு, இரண்டு விஷயங்கள்தான். ஒன்று ஒற்றைத் தலைமை, மற்றொன்று சசிகலா, தினகரன் ஆகியோரை எந்த நிலையிலும் அதிமுக-வில் ஏற்றுக்கொள்ளாது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் திமுக அரசைப் பாராட்டுவதை அதிமுக தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான்?'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!