Published:Updated:

``அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தத் தடைவிதிக்க முடியாது" - உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

``உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. தேவையான நடவடிக்கையை உயர் நீதிமன்றம் எடுத்துவருகிறது." - உச்ச நீதிமன்றம்.

``அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தத் தடைவிதிக்க முடியாது" - உச்ச நீதிமன்றம் உத்தரவு

``உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. தேவையான நடவடிக்கையை உயர் நீதிமன்றம் எடுத்துவருகிறது." - உச்ச நீதிமன்றம்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. கடந்த மாதம் 23-ம் தேதி அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சலசலப்புக்குப் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்திலேயே அடுத்தப் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க செயற்குழு உறுப்பினரான சண்முகம் ஜூலை 11-ல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை 4-ம் தேதி நடந்தது.

அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள், ``ஜூன் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் யாவும், அந்தப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு மட்டுமே பொருந்தும். அடுத்துவரும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த உத்தரவுகள் பொருந்தாது. மேலும், ஜூலை 11-ல் நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடைவிதிக்க இந்த முறையீட்டில் கோரிக்கை ஏதும் வைக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குப் பொதுக்குழுதான் விளக்கமளிக்க வேண்டும். ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும்" எனக் கூறி, வழக்கு விசாரணையை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,"உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. தேவையான நடவடிக்கையை உயர் நீதிமன்றம் எடுத்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு நாங்கள் ஏன் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்க வேண்டும்... அதற்கான காரணம் என்ன... உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பி அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடைவிதிக்கவும், இபிஎஸ் மீது உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவும் இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.