Published:Updated:

`தன் நிர்வாகத் திறன் இன்மையை மறைக்கவே ரெய்டு!’ - ஸ்டாலினை விமர்சித்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

அமைச்சர் அன்பழகன்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனைக்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

`தன் நிர்வாகத் திறன் இன்மையை மறைக்கவே ரெய்டு!’ - ஸ்டாலினை விமர்சித்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனைக்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
அமைச்சர் அன்பழகன்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றதில் அவர் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து கூட்டாக அறிக்கை!
ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து கூட்டாக அறிக்கை!

இந்நிலையில், அரசியலில் ஏற்படும் பின்னடைவை திசை திருப்ப திமுக முயற்சிக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ``அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோர கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது விடியா திமுக அரசு. அரசியல் பழிவாங்கல் உன்பெயர் திமுக-வா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏற்கெனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் சட்ட மீறல் நடத்திய திமுக, வெறுங்கையோடு திரும்பிய நிகழ்வை மறந்து, மீண்டும் முன்னாள் அமைச்சர் K.P. அன்பழகன், M.L.A., பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A. கோவிந்தசாமி ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோரின் இல்லங்களிலும் சோதனை என்ற சட்ட மீறலை இன்று நடத்திக் கொண்டிருக்கிறது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து கூட்டாக அறிக்கை!
ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து கூட்டாக அறிக்கை!

மக்களை ஏமாற்றி புறவாசல் வழியாக ஆட்சியில் அமர்ந்து 8 மாதங்கள் ஆகியும், இந்த விடியா திமுக அரசு, மக்களுக்கு பிரதானமாக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்டாமல், ஏற்கெனவே அம்மாவின் அரசு, தமிழகத்தை முன்னணி மாநிலமாக பல துறைகளில் வைத்திருந்த லைக்கு கேடு விளைவிக்கும் விதமாக உங்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, தமிழகமெங்கும் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆட்சிக் கட்டிலில் ஏறி குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஊர்தியை பங்குபெற வைக்க முடியாத விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய நிர்வாகத் திறமை இன்மையை மறைக்கவே தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து கூட்டாக அறிக்கை!
ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து கூட்டாக அறிக்கை!

விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதற்கு, எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism