Published:Updated:

அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்!

மதுசூதனன்
மதுசூதனன்

கடந்த சில நாள்களாகத் தீவிர சிகிச்சையிலிருந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஜூலை 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் மதுசூதனன். அவரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறதென்று தகவல்கள் வெளியான நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 80.

மதுசூதனன்
மதுசூதனன்

கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நலக் குறைபாடு காரணமாக மதுசூதனன் சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் மூச்சுத்திணறல் பிரச்னை காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த மாதம் அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு செய்திகள் பரவின. அப்போது அதிமுக-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``கழக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்” என அறிவிப்பு வெளியானது.

மதுசூதனன்
மதுசூதனன்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்திருந்த காலத்தில், ஜெயலலிதாவின் அணியிலிருந்தவர் மதுசூதனன். இவர் கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மதுசூதனன் 15 ஆண்டுகளுக்கும் மேல் அதிமுக-வின் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தொடர் சிகிச்சையிலிருந்த மதுசூதனன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அதிமுக: மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிப்பு! - அப்போலோவில் ஒரே நேரத்தில் சசிகலா, இ.பி.எஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு