Published:Updated:

`நான் அ.தி.மு.க பிரதிநிதியாக வந்துள்ளேன்!’ - மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரவீந்திரநாத்

கலிலுல்லா.ச

மக்களவையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு அ.தி.மு.க சார்பில் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டடது.

ரவீந்திரநாத் குமார்
ரவீந்திரநாத் குமார்

மக்களவையில், மத்திய அரசால் கொண்டுவரப்படும் மசோதாக்களை முதல் ஆளாக நின்று வரவேற்புகொடுப்பது அ.தி.மு.க தான். சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய முத்தலாக் மசோதாவை மக்களவையில், அ.தி.மு.க சார்பில் ரவீந்திரநாத் குமார் ஆதரித்துப்பேசினார். இது, கட்சிக்குள்ளே விவாதத்தை ஏற்படுத்தியது. காரணம், முன்னதாக இம்மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதை தொடக்கத்திலே எதிர்த்தவர், அன்வர் ராஜா.

அ.தி.மு.க எம்.பி
அ.தி.மு.க எம்.பி

இது தொடர்பாக அவர், `முத்தலாக்கை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க-வின் நோக்கம்’ என்றார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் பேசியதை புத்தகமாகவும் வெளியிட்டார். இதுமட்டுமில்லாமல், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முத்தலாக் மசோதாவுக்கு ரவீந்திரநாத் ஆதரவளித்தது கட்சிக்குள் புகைச்சலைக் கிளப்பியது.

Vikatan

இந்நிலையில், `இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்து, தேசிய மருத்துவ ஆணையம்’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான மசோதா, நேற்று மக்களவையில் தாக்கலானது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். அப்போது இதனை எதிர்ப்பதாக, ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். ``மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தலையிடக்கூடாது, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு கூடாது என்று ஜெயலலிதா இறுதி வரை கூறிவந்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

பல்வேறு நேர்மறையான அம்சங்கள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் இருந்தாலும், நான் அ.தி.மு.க பிரதிநிதியாக வந்துள்ளேன். தமிழக அரசு நீட் விலக்கு, நெக்ஸ்ட் தேர்வுக்குத் தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளது. அதனால், இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன்” என்று பேசினார். இந்த மசோதாவுக்கு தி.மு.க-வும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும், மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது.