Published:Updated:

`உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணி தொடரும்' - அன்புமணி ராமதாஸ்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு இன்று தாக்கல் செய்ய உள்ளேன். தமிழக முதல்வருக்கு நன்றி என தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் ( கே.அருண் )

அகில இந்திய அளவிலான இறகுப்பந்து போட்டிகள் நிறைவு விழா ஊட்டியில் உள்ள அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இறகுப்பந்து கழக மாநில தலைவரும், பா.ம.க., இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

அன்புமணி ராமதாஸ்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அன்புமணி ராமதாஸ்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
கே.அருண்

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பா.ம.க-வின் கொள்கைகளான சமூக நீதி, நீர்மேலாண்மை, வேளாண் மேம்பாடு, தரமான கல்வி, சுகாதாரம், மதுவிலக்கு, புகையிலை ஒழிப்பு போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய சூழலில் தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. நீர் மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் உலக அளவில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. மழை பெய்யும் சமயங்களில் அதனை சேமிக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கி ஏரி, குளங்களை தூர்வாரிட வேண்டும். ஆற்றில் மணல் அள்ளுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் சமீபத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லை என கூறி வருகிறார்கள். இப்பிரச்னையில் மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும். தமிழகத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கர்நாடகாவில் மேக்கே தாட்டூ அணை கட்டக் கூடாது. கோதாவரி, காவிரி நதிகளை இணைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அன்புமணி ராமதாஸ்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
கே.அருண்

நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. சமூக நீதிக்கும், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுக்க வேண்டும். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தி கற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என திணிக்கக் கூடாது. தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. அந்தந்த மாநிலத்தின் உரிமைகளையும், மாநிலங்களின் கலாசாரம், மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை மத்திய அரசு மதிக்க வேண்டும்

எட்டு வழி சாலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை சந்தித்தும் இத்திட்டம் சுற்றுசூழலுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது என விளக்கிக் கூறுவோம். எட்டு வழிச் சாலை திட்டத்தைத் தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய பட்ஜெட்டில் சில வரிகளை உயர்த்தியுள்ளனர். உலக அளவில் கச்சா எண்ணைய் விலை குறைந்து வரும் நிலையில், கச்சா எண்ணைய் வரியை உயர்த்தியிருப்பது தேவையற்றது.

மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்
மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்
கே.அருண்

கல்விக்கும், சுகாதாரத்துக்கும், வேளாண்மைக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருக்கலாம். மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க சார்பில் நான் போட்டியிடுகிறேன். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க-வுடனான கூட்டணி தொடரும். தமிழக முதல்வருக்கு நன்றி” என்றார்.