Published:Updated:

ஜெயலலிதா மரண வழக்கு; ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைப்பு!

ஆறுமுகசாமி

அண்மையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவ வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா மரண வழக்கு; ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைப்பு!

அண்மையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவ வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published:Updated:
ஆறுமுகசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5.12.2016 அன்று மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தததை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்படது. பின்னர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து 25.9.2017 அன்று தமிழக அரசு உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆணையம் தன் விசாரணையை முழுமையாக முடிக்கும் வரை, அதன் பதவி காலமும் நீட்டிக்கப்பட்டுவருகிறது. அண்மையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழு உதவ வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுவுடன், ஆறுமுகசாமி வருகிற 16-ம் தேதி ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism