Published:Updated:

``இஸ்லாமிய நாடுகளிலிருந்து எதிர்ப்பு வந்ததும் மோடி நடவடிக்கை எடுக்கிறார்..!" - ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

``இந்தப் பிரச்னை ஏற்பட்டு 10 நாள்களைக் கடந்துவிட்டது. நாங்கள் தொடர்ந்து குரலெழுப்பினோம், கண்டுகொள்ளவில்லை. இன்றோ இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.’' - ஒவைசி

``இஸ்லாமிய நாடுகளிலிருந்து எதிர்ப்பு வந்ததும் மோடி நடவடிக்கை எடுக்கிறார்..!" - ஒவைசி

``இந்தப் பிரச்னை ஏற்பட்டு 10 நாள்களைக் கடந்துவிட்டது. நாங்கள் தொடர்ந்து குரலெழுப்பினோம், கண்டுகொள்ளவில்லை. இன்றோ இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.’' - ஒவைசி

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி

பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவுக்கு எதிராக் கண்டங்களும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அறிக்கைகளும் வெளியிட்டு வந்தன. அதைத் தொடர்ந்து, நேற்று இந்த விவகாரத்தில் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நுபுர் ஷர்மாவுக்கு மும்பை போலீஸ் நேற்று சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புகளுக்குப் பிறகே பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதாக அசாதுதீன் ஒவைசி விமர்சித்திருக்கிறார்.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

மகாராஷ்டிரா மாநிலம், லத்தூரில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு பேசிய ஒவைசி, ``இந்த நாட்டில் இருக்கும் முஸ்லிம்களை கவனிக்காத பிரதமர்மீது நாங்கள் கோபத்தில் இருக்கிறோம். இன்று நான் பிரதமர் மோடிக்கு எதிராக அரசு வரைமுறையை மீறி நாங்கள் பேசினால்... நாளை காலை முதலே `ஒவைசியைக் கைதுசெய்..!' என்று பா.ஜ.க முழக்கங்களை எழுப்பும். ஆனால், இன்று இந்தப் பிரச்னை ஏற்பட்டு 10 நாள்களைக் கடந்துவிட்டது. நாங்கள் தொடர்ந்து குரலெழுப்பினோம், கண்டுகொள்ளவில்லை. இன்றோ இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். அந்த ட்வீட்களும், அவர்கள் பயன்படுத்திய கருத்துகளும் தவறென்று நீங்கள் நினைத்தால், அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பு" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism