Published:Updated:

குஜராத் தேர்தல்: ``பாகிஸ்தான் தேர்தல் மாதிரியைப் பின்பற்றுகிறது பாஜக"- அகிலேஷ் யாதவ் காட்டம்

அகிலேஷ் யாதவ் ( ட்விட்டர் )

``பாகிஸ்தானைப்போல பா.ஜ.க-வும் வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க அனுமதிக்கிறது'' - அகிலேஷ் யாதவ்

குஜராத் தேர்தல்: ``பாகிஸ்தான் தேர்தல் மாதிரியைப் பின்பற்றுகிறது பாஜக"- அகிலேஷ் யாதவ் காட்டம்

``பாகிஸ்தானைப்போல பா.ஜ.க-வும் வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க அனுமதிக்கிறது'' - அகிலேஷ் யாதவ்

Published:Updated:
அகிலேஷ் யாதவ் ( ட்விட்டர் )

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எட்டாவா மாவட்டத்திலுள்ள தன் கிராமமான சைபாயில் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "மைன்புரி மக்களவை, ராம்பூர் மற்றும் கட்டௌலி சட்டமன்றத் தொகுதிகளில், உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும், காவல்துறையினரும் ஒரு பிரிவினரை வாக்களிக்கக் கூடாது என்று அச்சுறுத்தியிருக்கின்றனர். பாகிஸ்தானைப்போல பா.ஜ.க-வும் வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க அனுமதிக்கிறது. பாகிஸ்தானில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை ராணுவம்தான் தீர்மானிக்கிறது அதுபோலத்தான் இங்கே பா.ஜ.க செயல்படுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

இதற்கு முன்னர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது , ``உள்ளாட்சி நிர்வாகங்களே பா.ஜ.க முகவர்களாகச் செயல்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடுநிலையான தேர்தலை எதிர்பார்க்க முடியாது. பா.ஜ.க-வின் தவறான ஆட்சியிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை இது'' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.