Published:Updated:

``பாஜக-வும், காங்கிரஸும் ஒன்றுதான்; பாரத் ஜோடோவில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை!" - அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் ( ட்விட்டர் )

பாரத் ஜோடோவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தரப்பிலிருந்து தனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

``பாஜக-வும், காங்கிரஸும் ஒன்றுதான்; பாரத் ஜோடோவில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை!" - அகிலேஷ் யாதவ்

பாரத் ஜோடோவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தரப்பிலிருந்து தனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அகிலேஷ் யாதவ் ( ட்விட்டர் )

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 3-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவிருக்கிறது. அங்கு பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெறும் சூழலில், பாரத் ஜோடோவில் கலந்துகொள்ளுமாறு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் தரப்பிலிருந்து இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை

இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உ.பி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் அழைப்பு குறித்துப் பேசியிருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவிடம், பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா... எனக் கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்
ட்விட்டர்

அதற்கு, ``காங்கிரஸும், பா.ஜ.க-வும் ஒன்றுதான். எங்களின் கட்சி வேறுபட்ட சித்தாந்தம் கொண்டது. உங்கள் போனில் அழைப்பிதழ் இருந்தால் அனுப்புங்கள். எங்கள் உணர்வுகள் அவர்களின் யாத்திரையுடன் இருக்கின்றன. எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை" என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.