Published:Updated:

உக்ரைன்: ``ஓரிரு நாள்களில் தமிழக மாணவர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள்!” - கலாநிதி வீராசாமி எம்.பி

கலாநிதி வீராசாமி

உக்ரைன் நாட்டில் போர்ச் சூழலில் சிக்கியிருந்த தமிழக மாணவர்களில் பெரும்பாலோர் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டனர். மீதமுள்ள அனைவரும் ஓரிரு நாள்களில் அழைத்துவரப்படுவார்கள் என்று கலாநிதி வீராசாமி எம்.பி கூறுகிறார்.

உக்ரைன்: ``ஓரிரு நாள்களில் தமிழக மாணவர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள்!” - கலாநிதி வீராசாமி எம்.பி

உக்ரைன் நாட்டில் போர்ச் சூழலில் சிக்கியிருந்த தமிழக மாணவர்களில் பெரும்பாலோர் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டனர். மீதமுள்ள அனைவரும் ஓரிரு நாள்களில் அழைத்துவரப்படுவார்கள் என்று கலாநிதி வீராசாமி எம்.பி கூறுகிறார்.

Published:Updated:
கலாநிதி வீராசாமி

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், சுமார் 2,000 தமிழக மாணவர்கள் உட்பட சுமார் 19,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்தனர். உணவு, இருப்பிடம் இல்லாமல் தவித்த அவர்களில் பலர், உக்ரைன் எல்லையைக் கடந்து ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்லோவாகியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். பின்னர், அவர்களைத் தனி விமானங்கள் மூலமாக இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்கியது.

உக்ரைன்
உக்ரைன்

இந்த நிலையில், அங்கிருந்து விமானங்களில் அழைத்துவருவதில் வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தமிழக மாணவர்கள் புகார் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, தமிழக மாணவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு குழு ஒன்றை உருவாக்கியது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய அந்தக் குழு கடந்த வாரம் டெல்லி சென்றது. ஏற்கெனவே, நான்கு மத்திய அமைச்சர்கள் அங்கு சென்று மாணவர்களை மீட்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். எனவே, தனியாக எம்.பி-க்கள் அடங்கிய குழு செல்ல வேண்டியதில்லை என்பது வெளியுறவுத்துறையின் நிலைப்பாடாக இருந்ததால், தமிழக அரசின் குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள், தமிழக மாணவர்களை அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம்காட்டிவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியிடம் பேசினோம். “தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள் உக்ரைனில் படித்துவருவதாக முன்பு சொல்லப்பட்டது. ஆனால், 2,000-க்கும் குறைவான தமிழக மாணவர்கள் அங்கு படிக்கிறார்கள். தற்போது, சுமி என்ற இடத்தைத் தவிர மற்ற இடங்களிலிருந்து மாணவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். சுமியில் 63 தமிழக மாணவர்கள் உட்பட சுமார் 600 இந்திய மாணவர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சுமியில் இரு தரப்பினரும் சண்டையை நிறுத்தினால்தான், நம்முடைய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவர முடியும்.

உக்ரைன்
உக்ரைன்

நேற்றைய (மார்ச் 7) நிலவரப்படி, தமிழகத்தைச் சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டார்கள். அரசு சார்பில் அழைத்துவரப்பட்டவர்கள் தவிர, சுமார் 250 மாணவர்கள் தாங்களாகவே இந்தியாவுக்கு கிளம்பிவந்திருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் தொடர்புகொள்வதற்காக ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டு, டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் தனியாக ஒரு டீம் செயல்பட்டுவருகிறது. உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருக்கும் தமிழக மாணவர்களுடன் இந்த டீம் தொடர்பில் இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாள்களில் மீதமுள்ள தமிழக மாணவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுவிடுவார்கள்” என்றார் கலாநிதி வீராசாமி.