Published:Updated:

``பாஜக ஆட்சியை விவரிக்க பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளுக்கும் தடை..!" - மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

`பா.ஜ.க எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளையும் அரசு தடைசெய்துவிட்டது.' - மஹுவா மொய்த்ரா

``பாஜக ஆட்சியை விவரிக்க பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளுக்கும் தடை..!" - மஹுவா மொய்த்ரா

`பா.ஜ.க எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளையும் அரசு தடைசெய்துவிட்டது.' - மஹுவா மொய்த்ரா

Published:Updated:
மஹுவா மொய்த்ரா

மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், மக்களவையிலும், மாநிலங்களிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கிறது.

அதில் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய் ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜக வாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, கொடூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரெளடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக சிவசேனாவின் மாநிலங்களவை எம்.பி பிரியங்கா சதுர்வேதி, தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா பாலின சமத்துவத்தில் 135-வது இடத்திலும், ஆரோக்கியத்தில் 146 நாடுகளில் கடைசியாக வரிசைப்படுத்திய உலகப் பொருளாதார மன்றத்தின் ஆய்வறிக்கை குறித்த செய்தித்தாள் பக்கத்தின் புகைப்படத்தை ட்வீட் செய்து, "அறிக்கையில் இருக்கும் (பாலியல் துன்புறுத்தல்) இந்த வார்த்தைகளைப் நாடாளுமன்றத்தில் பேசுவது நாடாளுமன்றத்துக்கு எதிரானதாகக் கருதப்படும் என்பதால், அதை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ஒரு பேட்டியில், ``நரேந்திர மோடி அரசின் 'உண்மையை விவரிக்க' பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் தடுக்கப்பட்டிருக்கின்றன" எனக் கூறினார். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாடாளுமன்றம் தடை செய்திருக்கும் வார்த்தைகளின் புதிய பட்டியலில் `சங்கி' என்ற வார்த்தை இல்லை. பா.ஜ.க எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளையும் அரசு தடைசெய்துவிட்டது" எனப் பதிவிட்டிருக்கிறார்.