Published:Updated:

சிறுபான்மையினர் நலத்திட்டங்கள்: ஒதுக்கிய ரூ.5,020 கோடியில் செலவு செய்தது ரூ.712 கோடிதானா?!

நாடாளுமன்றம்

சிறுபான்மை மக்கள் நலத்திட்டங்களுக்காகக் கடந்த பட்ஜெட்டில் ரூ.5,020 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வெறும் ரூ.712 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

Published:Updated:

சிறுபான்மையினர் நலத்திட்டங்கள்: ஒதுக்கிய ரூ.5,020 கோடியில் செலவு செய்தது ரூ.712 கோடிதானா?!

சிறுபான்மை மக்கள் நலத்திட்டங்களுக்காகக் கடந்த பட்ஜெட்டில் ரூ.5,020 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வெறும் ரூ.712 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி, "கடந்த ஐந்து நிதியாண்டுகளில் சிறுபான்மை மக்கள் நலனுக்காக எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எவ்வளவு உண்மையில் செலவிடப்பட்டது... ஒதுக்கீடுகள் குறித்து நிதி அமைச்சகத்திடம் சிறுபான்மை நல அமைச்சகத்தால் வலியுறுத்தப்பட்டிருக்கின்றனவா?" என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.

சிறுபான்மையினர் நலத்திட்டங்கள்: ஒதுக்கிய ரூ.5,020 கோடியில் செலவு செய்தது ரூ.712 கோடிதானா?!

இதற்கு மத்திய சிறுபான்மையின நல அமைச்சர் ஸ்மிருதி இரானி 2017-18 முதல் 2022 - 23-ம் நிதியாண்டு வரையிலான பட்ஜெட் ஒதுக்கீடு, திருத்தப்பட்ட மதிப்பீடு, உண்மைச் செலவினம் ஆகியன பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்.

அதில், "​​ஜவுளி அமைச்சகத்தின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் சமூகத்தில் பின்தங்கிய சலுகை பெற்ற பிரிவினர் உட்பட ஒவ்வொரு பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

சிறுபான்மை விவகார அமைச்சகம், ஆறு (6) மையமாக அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளிப்புக்காக பல்வேறு திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டங்கள் சமூகத்தின் அனைத்து நலிந்த பிரிவினருக்கும் சிறுபான்மையினர் உட்பட பிரதிநிதித்துவத்தை அளிக்கின்றன.

அதன்படி கடந்த 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,195.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.4,195.48 கோடியாகும். ரூ.4,139.30 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.4,700 கோடியாகும். இதில் ரூ.3,853.01 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் 2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5,029 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.4,005 கோடியாகும். இதில் ரூ.3998.56 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. 2021-22-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,810.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.4,346.45 கோடியாகும். இதில் ரூ.4,325.24 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் 2022- 23 பட்ஜெட்டில் ரூ.5,020.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.4,005 கோடியாகும். இதில் 17.3.2023 வரை ரூ.712.54 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சு.வெங்கடேசன். "அமைச்சர் தந்திருக்கும் விவரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. 2018-19-ல் தொடங்கி 2022-23 வரை எல்லா நிதியாண்டிலும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட உண்மைச் செலவினம் குறைவாகவே இருக்கிறது. 2018 -19 = 82%, 2019 - 20 = 95 %, 2020 - 21=79%, 2021-22 = 90% என்பதாகவே இருக்கிறது. 2022 - 23-ல் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட உண்மைச் செலவினம் 14% மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

2020 - 21-க்குப் பிறகு திருத்தப்பட்ட மதிப்பீடே பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்துவிட்டது. 2022-23-ல் திருத்தப்பட்ட மதிப்பீடே 52 சதவிகிதமாகவே இருக்கிறது. பட்ஜெட் என்பதே சிறுபான்மையினரைப் பொறுத்தவரை கேலிக் கூத்தானாதாக இருக்கிறது. 2023 - 24 பட்ஜெட் ஒதுக்கீடே 38 சதவிகிதம் சரிந்திருக்கிறது.

கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாடு ஆகியன எல்லாம் பெரும் வெட்டைச் சந்தித்திருக்கின்றன. ஆனால், சிறுபான்மை நல அமைச்சர், ஒதுக்கீடுகள் போதுமானது, நிதி அமைச்சகத்திடம் எந்த நிதி ஒதுக்கீடு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்கிறார். ஆனால், திட்டங்கள் வெற்றிகரமாக அமலாகிறதாம், சிறுபான்மை நல அமைச்சகம் என்ற பெயருக்கும் அமைச்சரின் அணுகுமுறைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?" என்று தெரிவித்திருக்கிறார்.