Published:Updated:

``மார்கரெட் ஆல்வா குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது" - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ( ட்விட்டர் )

``அவர் யாரை வேண்டுமானாலும் அழைக்கட்டும், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்." - பிரகலாத் ஜோஷி

``மார்கரெட் ஆல்வா குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது" - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

``அவர் யாரை வேண்டுமானாலும் அழைக்கட்டும், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்." - பிரகலாத் ஜோஷி

Published:Updated:
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ( ட்விட்டர் )

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா, தன்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக கூறியிருந்த நிலையில், ஆல்வாவின் கூற்றை குழந்தைத்தனமான குற்றச்சாட்டு என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சித்துள்ளார்.

முன்னதாக மார்கரெட் ஆல்வா தனது ட்விட்டர் பக்கத்தில், ``அன்புடைய பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல், இன்று பா.ஜ.க-விலுள்ள உள்ள சில நண்பர்களிடம் நான் பேசிய பிறகு, எனது தொலைபேசிக்கான அனைத்து அழைப்புகளும் திருப்பி விடப்படுகின்றன. மேலும் என்னால் பிற அழைப்புகளைச் மேற்கொள்ளவோ, பெறவோ முடியவில்லை.

மார்கரெட் ஆல்வா
மார்கரெட் ஆல்வா

நீங்கள் என்னுடைய தொலைபேசியை மீட்டெடுத்தால். இன்றிரவு பா.ஜ.க, திரிணாமுல் அல்லது பி.ஜே.டி-யிலிருந்து எந்த எம்.பி-யையும் நான் அழைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.

மேலும் மத்திய பாஜக அரசை `பிக் பிரதர்' என குறிப்பிட்டு, ``புதிய இந்தியாவில், அனைத்து அரசியல்வாதிகளுக்கிடையிலான உரையாடல்களை `பிக் பிரதர்' கேட்கிறார் என்ற அச்சம் ஊடுருவுகிறது எனவும் ஆல்வா கூறியிருந்தார். இந்த நிலையில் தான், ஆல்வாவின் இத்தகைய கூற்றை மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, அஜய் மிஸ்ரா விமர்சித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
ட்விட்டர்

இதுகுறித்து பிரகலாத் ஜோஷி, ``அவருடைய தொலைபேசியை ஏன் யாரேனும் ஒட்டுக் கேட்கவேண்டும். அவர் யாரை வேண்டுமானாலும் அழைக்கட்டும், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் ஏன் இதைச் செய்யவேண்டும். இதுவொரு குழந்தைத்தனமான குற்றச்சாட்டு. ஒரு மூத்த நபர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது" என்கிறார்.

மேலும் அஜய் மிஸ்ரா, ``மனச்சோர்வினால் இதுபோன்று அவர் பேசுகிறார். அவருடைய தொலைபேசியை ஒட்டுக்கேட்பதால் என்ன பயன். தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளே இல்லை" எனக் கூறினார்.