Published:Updated:

``அம்பானி, அதானியால் ராகுலை விலைக்கு வாங்க முடியாது; அவர் ஒரு போர் வீரர்!" - பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி - அம்பானி, அதானி

``விசாரணை அமைப்புகள் அவரைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவர் ஒரு போர் வீரர் என்பதால் பயப்படவில்லை." - பிரியங்கா காந்தி

``அம்பானி, அதானியால் ராகுலை விலைக்கு வாங்க முடியாது; அவர் ஒரு போர் வீரர்!" - பிரியங்கா காந்தி

``விசாரணை அமைப்புகள் அவரைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவர் ஒரு போர் வீரர் என்பதால் பயப்படவில்லை." - பிரியங்கா காந்தி

Published:Updated:
பிரியங்கா காந்தி - அம்பானி, அதானி

`கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தேசத்தை ஒன்றிணைப்போம்’ என நடைப்பயணமாக `பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்டுவருகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. கடைசியாக டெல்லியில் யாத்திரை நடத்திய ராகுல், ஒன்பது நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று உத்தரப்பிரதேசத்தில் நுழைந்தார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி
பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி

இதை முன்னிட்டு அகிலேஷ் யாதவ் நேற்று, ``பாரத் ஜோடோ அழைப்புக்கு நன்றி. யாத்திரையின் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகள்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸின் பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, காஜியாபாத் மாவட்டத்தின் லோனி பகுதியில் யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுலை இன்று வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து யாத்திரையில் ராகுலை வரவேற்றுப் பேசிய பிரியங்கா காந்தி, ``என் அன்புக்குரிய சகோதரரே, உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைகொள்கிறேன். ஏனெனில், உங்களுடைய இமேஜை அழிக்க அரசு ஆயிரம் கோடிகளைச் செலவு செய்தபோதிலும் நீங்கள் பின்வாங்கவில்லை. அதானியும் அம்பானியும் பல அரசியல் தலைவர்களை விலைக்கு வாங்கினார்கள், பொதுத்துறை நிறுவனங்களை வாங்கினார்கள், ஊடகங்களை வாங்கினார்கள். ஆனால், என் சகோதரரை விலைக்கு வாங்க முடியவில்லை. அவர்களால் வாங்கவும் முடியாது.

ராகுலுடன் ஏ.எஸ்.துலாத்
ராகுலுடன் ஏ.எஸ்.துலாத்

அவருக்கு எதிராக அனைத்துச் சக்திகளும் பயன்படுத்தப்பட்டன. விசாரணை அமைப்புகள் அவரை குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவர் ஒரு போர் வீரர் என்பதால் பயப்படவில்லை" என்றார்.

இன்று நடைபெற்ற யாத்திரையில், ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத், ராகுலுடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.