தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து பேசிய அவர், ``அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும். அம்பேத்கரின் பிறந்த நாளன்று தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்படும். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்படும்'' என்கிறார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், ``அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சூரியன். அம்பேத்கர் அறிவு சுடராய் விளங்கி அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து கொடுத்தவர். அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவை. இவை எதிர்காலத்துக்கு ஒளிவிளக்கு. அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி. வேண்டியதை சேர்த்த ஓவியர். சமூக நீதியின் நோக்கம் சமத்துவத்தை அடைவதே. இவ்விரண்டும் நமது இலக்கின் இரண்டு கண்கள் என்பதையும் இந்த மாமன்றம் மட்டுமல்ல, இந்தியாவே அறியும்'' என்றார்.