Published:Updated:

பிரியாணி விழாவிலும் பின்வாங்கியதா... திராவிட மாடல் ஆன்மிக மாடலாகிறதா? - திமுக விளக்கம்

பிரியாணி திருவிழா அறிவிப்பு

``அறிக்கை வெளியிடுவது அதைத் திரும்ப வாங்குவது என திமுக அரசு தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் பின் வாங்கிக் கொண்டிருக்கிறது” என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஆம்பூர் பிரியாணி திருவிழா இணைந்திருக்கிறது.

பிரியாணி விழாவிலும் பின்வாங்கியதா... திராவிட மாடல் ஆன்மிக மாடலாகிறதா? - திமுக விளக்கம்

``அறிக்கை வெளியிடுவது அதைத் திரும்ப வாங்குவது என திமுக அரசு தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் பின் வாங்கிக் கொண்டிருக்கிறது” என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஆம்பூர் பிரியாணி திருவிழா இணைந்திருக்கிறது.

Published:Updated:
பிரியாணி திருவிழா அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மே மாதம் 13,14,15 ஆகிய மூன்று தேதிகளில் அரசு சார்பில் நடக்கவிருந்த ஆம்பூர் பிரியாணித் திருவிழா கனமழை காரணமாக ஒத்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ``ஆம்பூர் பிரியாணிக்குத் தனி மரியாதை கிடைக்கும் வகையில் இந்தத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 30 முதல் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பிரியாணிகள் உரிய விலையில் வழங்கப்படும். இது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் தரப்படும்” என இது குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ் வாஹா விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆம்பூரில் பெரும்பாலான இடங்களில் மாட்டிறைச்சி பிரியாணி கிடைக்கும். இந்த நிலையில், ஆம்பூர் பிரியாணித் திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி குறித்து அறிவிப்பு வெளியாகாதது பெரும் சர்ச்சையானது. தி.மு.க-வின் கூட்டணிகளே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. “பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியும் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் நாங்களே திருவிழா நடக்கும் பகுதிக்கு எதிரே மாட்டிறைச்சி பிரியாணி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வோம்” என்று விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை செயலாளர் ஓம்பிரகாஷ் திருப்பத்தூர் கோட்டாட்சியர் காயத்ரியிடம் மனு அளித்தார். மேலும், பல இஸ்லாமிய அமைப்புகளும் மாட்டிறைச்சி வழங்கப்படாததை எதிர்த்து கருத்துகளைத் தெரிவித்தனர்.

பிரியாணி
பிரியாணி

“உத்தரப்பிரதேசம் போலத் தமிழ்நாடு மாறுகிறது, என்ன சாப்பிட வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை” என்பது உட்பட பல்வேறு கடுமையான விமர்சனங்களை வைக்கப்பட்டதை அடுத்து பிரியாணித் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், கனமழை காரணமாக நிறுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனச் சிறுபான்மையினர் ஆணையம் மாவட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரியாணி விழாவிலும் பின்வாங்கியதா தி.மு.க - திராவிட மாடல் ஆன்மிக மாடலாகிறதா என்ற கேள்விகளை தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்… ``பிரியாணியை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு அனைத்து வகையான பிரியாணிகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அது தி.மு.க-வின் கொள்கை முடிவு இல்லை. தமிழ்நாட்டு முதல்வரோ அரசோ கொள்கை முடிவெடுத்து அறிவிக்கவில்லை. அந்த மாவட்டத்திலிருக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நடத்துகிறார். எப்படி நடத்த வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவரது அதிகார எல்லைக்குப்பட்டது. இதில் எங்கே தி.மு.க கொள்கை வருகிறது என்று தெரியவில்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்த விவகாரத்தில் எந்த முகாந்திரத்தில் தி.மு.க மீது குறை சொல்கிறார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். இதற்கு அவர்கள் பதிலளிக்கும்போது அவர்களின் உள்நோக்கம் வெளிப்பட்டுவிடும். அடுத்த முறை இப்படி மேலோட்டமாக விமர்சனம் வைக்க நிச்சயம் அஞ்சுவார்கள்” என்றவர்…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“விமர்சனம் செய்ய வேண்டாம் எனச் சொல்லவில்லை. முதல்வர் தளபதி சொன்ன திராவிட மாடலின் ஆறு அம்சங்களிலிருந்து கழக ஆட்சி தவறினால் அது குறித்து நிச்சயம் விமர்சனம் வைக்கலாம். அதற்கு எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் நாங்கள் பதிலளிக்கத் தயாராகவே இருக்கிறோம். சமூக நீதி, சமத்துவம், பெண் சுதந்திரத்தில் சிக்கல் ஏற்பட்டால் தாராளமாக எங்களைக் கை நீட்டிக் கேள்வி கேட்கலாம். அவர்களைப் போல நிச்சயம் ஓடி ஒழிய மாட்டோம், மழுப்பலான பதில் சொல்ல மாட்டோம். பதில் சொல்லாமல் தவிர்த்தோம் என்றால் பின் வாங்கிவிட்டோம் எனவும் திராவிட மாடலில் தவறி விட்டோம் எனவும் விமர்சனங்களை வைக்கலாம். திராவிட மாடல் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள், புரிந்தும் புரியாததுபோலத் உறங்குபவர்களை நாம் தட்டி எழுப்ப முடியாது. திராவிட மாடல் அரசியல் என்பதைக் கழக அரசு நூற்றுக்கு நூறு சரியாக, பாதை மாறாமல் சென்று கொண்டிருக்கிறது.

மு.க ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

அரசின் சாதனைகள் குறித்து எந்த விமர்சனமும் வைக்க முடியாதவர்கள் இதைப்போல ஒன்றுமில்லாத விஷயங்களை எடுத்து விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய தேவை நமக்கில்லை. நாம் செய்வதற்கு இன்னும் பல நூறு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்துவோம்.” என விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism