Published:Updated:

பாகிஸ்தான்: இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம்? - பாதுகாப்பைப் பலப்படுத்திய இஸ்லாமாபாத் போலீஸ்!

இம்ரான் கான்

இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்: இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம்? - பாதுகாப்பைப் பலப்படுத்திய இஸ்லாமாபாத் போலீஸ்!

இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Published:Updated:
இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ``என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நான் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளேன். அந்த வீடியோவில் நான் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன். நான் கொல்லப்பட்டால், அந்த வீடியோ பகிரங்கமாக வெளியிடப்படும்'' என்று அண்மையில் கூறியிருந்தது, நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இந்த நிலையில், இம்ரானைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் பரவியதையடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய இஸ்லாமாபாத் போலீஸ் உயரதிகாரிகள், ``பாகிஸ்தானின் தலைநகா் இஸ்லாமாத்தில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான், பானி காலா பகுதிக்கு வருவார் எனக் கூறப்படுவதால் அந்தப் பகுதியில் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவா் அங்கு வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இம்ரான் கானுக்கு சட்டப்படி என்ன பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமோ அது முழுமையாக வழங்கப்படும். மேலும் இம்ரான் கானின் பாதுகாப்புக் குழுக்களிடமிருந்தும் பரஸ்பர ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன’’ என்றார்.

மேலும் இது தொடர்பாக இம்ரான் கானின் உறவினர் ஹசன் நியாசி , "இம்ரான் கானுக்கு எதாவது நடந்தால், அது பாகிஸ்தான் மீதான தாக்குதலாகவே கருதப்படும்" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism