Published:Updated:

`ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன்; அரசியல் பேசாமல் எப்படி?!’ - அரசு விழாவில் அமித் ஷா அதிரடி

அமித் ஷா

அமித் ஷா, ``தி.மு.க-வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எங்கள் மீது ஊழல் குற்றசாட்டுவைக்கும் முன்னர் உங்கள் குடும்பம் செய்ததைத் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்றார் காட்டமாக.

`ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறேன்; அரசியல் பேசாமல் எப்படி?!’ - அரசு விழாவில் அமித் ஷா அதிரடி

அமித் ஷா, ``தி.மு.க-வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எங்கள் மீது ஊழல் குற்றசாட்டுவைக்கும் முன்னர் உங்கள் குடும்பம் செய்ததைத் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்றார் காட்டமாக.

Published:Updated:
அமித் ஷா

ப்உற்சாக வரவேற்பு

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான அமித் ஷா, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் சென்னை வந்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டணி தொடர்பாகவும், கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாகவும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

அமித் ஷா வருகை
அமித் ஷா வருகை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்டோர் அமித் ஷாவை வரவேற்றனர். இவர்களுடன் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், எம்.பி ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் புறப்பட்ட அமித் ஷா சாலையில் இறங்கி, இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களை நோக்கிக் கையசைத்தார்.

சாலையில் சிறிது நேரம் நடந்து சென்ற அமித் ஷாவுடன் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோரும் சாலையில் நடந்தனர். அப்போது ஒருவர் பதாகையை அமித் ஷாவை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுவருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நான் சிறிது காலம் இடைவெளிவிட்டு தமிழகம் வந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் அரசியல் பேசுகிறேன்!
அமித் ஷா

அரசு நிகழ்ச்சியில் அமித் ஷா!

பின்னர் சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுக்கச் சென்றார். மாலை 4:30 மணிக்கு கலைவாணர் அரங்கில் அரசு நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் ஹோட்டலில் அமித் ஷாவை 4 மணி அளவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று ஜெயக்குமார், அமித் ஷா சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாகவே பார்க்கப்பட்டது. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்துப் பேசப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அமித் ஷா
அமித் ஷா

பின்னர் 4:30 மணிக்கு ஹோட்டலில் இருந்து கலைவாணர் அரங்கம் புறப்பட்டார் அமித் ஷா. அங்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அமித் ஷாவை வரவேற்றனர். கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார் அமித் ஷா. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அமித் ஷாவுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினர். முதல்வர் விநாயகர் சிலையையும், துணை முதல்வர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர்.

உறுதியான கூட்டணி!

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

அமித் ஷா
அமித் ஷா

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், ``2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். வெற்றிக் கூட்டணியான அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்” என அமித் ஷா முன்னிலையிலே அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ``தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது அ.தி.மு.க அரசு. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மழைநீர் வீணாவதைத் தடுக்கப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வரும், ``வரும் தேர்தலில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி தொடரும்’’ என்றார்.

தமிழகம் முன்னணி வகிக்கிறது! - அமித் ஷா 

இறுதியாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டினார். ``உலகத்தின் தொன்மையான மொழியான தமிழில் என்னால் உரையாற்ற முடியாது. ஏனென்றால், எனக்குத் தமிழ் தெரியாது. தமிழ் மொழியில் பேச முடியாததற்கு முதலில் மன்னிப்புக் கோருகிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

கொரோனா தடுப்பில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டதை அறிவோம். கோவிட் தொற்று பரவலை தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாகக் கையாண்டுவருகிறார்கள். அறிவியல்பூர்வமாக செயல்பட்டு தமிழக அரசு கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. அனைத்துத் திட்டங்களிலும் தமிழகம் முன்னணிவகிக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``தி.மு.க தலைவர்கள், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்திருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் நீங்கள் இருந்தபோது நீங்கள் தமிழ்நாட்டுக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தீர்கள் எனப் பட்டியலிடத் தயாரா?

அமித் ஷா
அமித் ஷா

நான் இன்று சென்னை வந்திருக்கிறேன். மோடி அரசு தமிழகத்துக்குச் செய்த நல திட்டங்களை நான் பட்டியலிட்டுச் சொல்ல தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? ஊழலுக்கு எதிராக பேச தி.மு.க - காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது” என சவால் விடுத்தவர், ``மன்மோகன் ஆட்சியைவிட எங்கள் ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக அளவில் பட்ஜெட் ஒதுக்கினோம்’’ என்றார்.

அமித் ஷா
அமித் ஷா

பின்னர், ``நான் சிறிது காலம் இடைவெளிவிட்டுத் தமிழகம் வந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் அரசியல் பேசுகிறேன். இந்தியாவில் வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வந்திருக்கிறது. தமிழகத்திலும் அதை நாங்கள் செய்வோம். தி.மு.க-வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எங்கள் மீது ஊழல் குற்றசாட்டுவைக்கும் முன்னர் உங்கள் குடும்பம் செய்ததைத் திரும்பிப் பார்க்க வேண்டும்” என்றார் காட்டமாக.