Published:Updated:

`தாய் மொழியுடன் இந்தியையும் பயன்படுத்துவோம்!’ - மத்திய அமைச்சர் அமித் ஷா

அமித் ஷா
அமித் ஷா

இந்தியாவின் முன்னேற்றம் தாய்மொழி மற்றும் அலுவல் மொழியின் ஒருங்கிணைப்பில் அடங்கியுள்ளது.

இன்று `இந்தி திவாஸ்’ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி வாழ்த்து தெரிவித்து, ட்வீட் செய்திருக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``உணர்வுகளை வெளிப்படுத்த மொழி, மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாகச் செயல்படுகிறது. இந்தி நமது கலாசார உணர்வு, தேசிய ஒற்றுமை, மற்றும் பழங்காலத்தின் அடிப்படை. மேலும் நவீனத்துக்கும், நவீன முன்னேற்றத்துக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளது.

மோடியின் தலைமையின் கீழ், இந்தி மற்றும் அனைத்து இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``இந்தி திவாஸ் பண்டிகையின்போது, அனைத்து நாட்டு மக்களும் அடிப்படை வேலைகளில் தங்கள் தாய் மொழியுடன் அதிகாரப்பூர்வ மொழியான இந்தியையும் படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் முன்னேற்றம் தாய்மொழி மற்றும் அலுவல் மொழியின் ஒருங்கிணைப்பில் அடங்கியிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் இனிய இந்தி திவாஸ் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். இதற்டையே, ட்விட்டரில், #StopHindiImposition டிரெண்டிகில் இடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

“என்னை இந்தி கத்துக்கச் சொன்னார் கமல்!”
அடுத்த கட்டுரைக்கு