Published:Updated:

“புகழேந்தி ஒரு வாய்ச்சொல் வீரர்!”

பழனியப்பன்
பிரீமியம் ஸ்டோரி
பழனியப்பன்

விளாசும் அ.ம.மு.க பழனியப்பன்

“புகழேந்தி ஒரு வாய்ச்சொல் வீரர்!”

விளாசும் அ.ம.மு.க பழனியப்பன்

Published:Updated:
பழனியப்பன்
பிரீமியம் ஸ்டோரி
பழனியப்பன்

‘அ.ம.மு.க ஒரு கட்சியல்ல; அது ஒரு கம்பெனி. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் ஓர் ஏமாற்றுப்பேர்வழி. துணைப் பொதுச்செயலாளர் பழனியப்பன், ஒரு பதவிக்கு பத்து பேரிடம் பணம் வசூலித்தவர்’ என்று அ.ம.மு.க-வின் அதிருப்தி செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்துவரும் நிலையில், அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், உயர்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘உங்களுக்கும் பெங்களூரு புகழேந்திக்கும் அப்படி என்னதான் பிரச்னை?’’

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

‘‘அவருக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் புதிய இடத்துக்குப் போக முடிவுசெய்துவிட்டார். எங்களை கடுமையாகப் பேசினால் அவரை அங்கு சேர்த்துக்கொள்வார்கள் என நினைக்கிறார். இவருடைய சித்து விளையாட்டுகள் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவரை அங்கு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.’’

‘‘ `அ.ம.மு.க ஒரு கட்சி அல்ல; அது ஒரு கம்பெனி. தேர்தல் ஆணையத்தில் அதைப் பதிவுசெய்ய முடியாது’ என்கிறாரே புகழேந்தி?’’

‘‘அ.ம.மு.க கட்சி அல்ல, கம்பெனி என்பது தெரிந்துதான் இவ்வளவு நாள் தெருத்தெருவாக வீடுவீடாக தினகரனையும் சின்னம்மாவையும் புகழ்ந்து பேசினாரா? ஒருவேளை அவர் கம்பெனி வியாபாரிபோல் விளம்பரம் செய்து அவருக்கு வருமானம் கிடைக்காததால்தான், வேறு இடத்துக்குப் போகிறார்போலிருக்கிறது. அவர் போகும் இடத்தையும் கம்பெனியாகத்தான் பார்ப்பார். `அ.ம.மு.க-வை தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய முடியாது’ என்று சொல்ல அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்திருக் கிறார்கள்.’’

‘‘அ.ம.மு.க-வைவிட்டு பலரும் வெளியேறுவதற்கு என்ன காரணம்?’’

பழனியப்பன்
பழனியப்பன்

‘‘அ.ம.மு.க-வைவிட்டு பலரும் வெளியேறு கிறார்கள் என்று சொல்ல முடியாது. முகம் தெரிந்த சிலர் வெளியேறியிருக்கலாம். அவர்கள் கொள்கைப்பிடிப்பு இல்லாத சந்தர்ப்பவாதத்தால் வெளியேறி இருக்கிறார்கள். அ.ம.மு.க என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.’

‘‘கட்சிக்கு விரோதமாகச் செயல்படுபவர்களை உடனே நீக்கினீர்கள். ஆனால், புகழேந்தியை மட்டும் நீக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?’’

‘‘கர்நாடகாவைச் சேர்ந்த இவரை, மண்டலப் பொறுப்பாளர் என்ற முறையில் கட்சித் தலைமையில் பரிந்துரை செய்து ஓசூர் சட்டமன்ற வேட்பாளர் ஆக்கினோம். ஓசூரில் ரூம் போட்டுப் படுத்துக்கொண்டு, மக்களைச் சந்திக்காமல் கெளரவமான வாக்குகள்கூட வாங்கவில்லை. அவர் ஒரு வாய்ச்சொல் வீரர். நாங்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியைப் பதிவுசெய்யும் வேலையில் இருக்கிறோம். பதிவுசெய்த பிறகு அவர்மீது நடவடிக்கை எடுப்போம்.’’

‘‘எம்.எல்.ஏ பதவியை தினகரன் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால், பத்தாயிரம் ஓட்டுகள்கூட வாங்க முடியாது என்கிறாரே?’’

‘‘யார் இந்தப் புகழேந்தி? இதையெல்லாம் பேசுவதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் பொறாமையின் உச்சத்தில் பேசுகிறார். ஆர்.கே நகருக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அம்மாவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தும் சிறந்த தலைவராக தினகரனை மக்கள் அடையாளம் கண்டு வாக்களித்துள்ளனர். ஓசூர் சட்டமன்றத் தேர்தலில் 1,200 ஓட்டுகள்கூட வாங்காத புகழேந்திக்கு, இதைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.’’

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் 800 முதல் 1000 கோடி ரூபாய் வரை தினகரன் வசூலித்ததாகவும், சேலத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் கைமாறிய தாகவும், அதை நீங்கள்தான் கையாண்டதாகவும் சொல்லும் புகழேந்தி, உங்களை வருமான வரித்துறையும் காவல்துறையும் விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் என்கிறாரே?’’

‘‘அவருடைய பேட்டிகளை உன்னிப்பாகக் கவனித்துவருவதோடு ஆதாரங்களையும் திரட்டிவருகிறேன். சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். அவர் என்னிடம் விளையாடப்பார்க்கிறார். அது பலிக்காது.’’

‘‘நீங்கள் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது ஒரு துணைவேந்தர் பதவிக்கு பத்து பேரிடம் பணம் பறித்தவர் என்று சொல்கிறாரே?’’

‘‘இவர் உண்மைக்குப் புறம்பாகப் பேசிவருகிறார். என்மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை உளறிக்கொண்டிருக்கிறார்.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலுக்காக தினகரன் பணம் வசூலித்துவருகிறார். அ.ம.மு.க தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்கிறாரே?’’

‘‘கொள்கைப்பிடிப்பு இல்லாத, ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசம் இல்லாமல், லட்சியத்தைக் குழி தோண்டிப் புதைத்த புகழேந்தி இதைப் பற்றிப் பேசக் கூடாது. முதன்முதலில் எடப்பாடி பழனிசாமியை மிகக் கேவலமாகப் பேசியவர் புகழேந்தி. அதனால், புகழேந்தியிடம் பழனிசாமியும், பழனிசாமியிடம் புகழேந்தியும் உஷாராக இருக்க வேண்டும்.’’