Published:Updated:

`சொந்தக் கட்சிக்காரனுக்கு எதிராவே செயல்படுற ஐடி-விங்க பாத்துருக்கீங்களா?’ - கொதிக்கும் புகழேந்தி

கலிலுல்லா.ச

என்னை அசிங்கபடுத்தும் விதமாக பாதி வீடியோ மட்டும் வெளியிட்டுள்ளனர்.

pugalenthi
pugalenthi

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கோவையைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிள் சிலரை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் கட்சியிலிருந்து நீக்கினார். அவர்களுடன் அ.ம.மு.கவின் புகழேந்தி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் சிலர், `கட்சிக்காக உழைக்கிறவங்களுக்கு கட்சியில மரியாத இல்ல’ என்று விரக்தியுடன் பேசுகின்றனர். அப்போது புகழேந்தி, ``தப்பா நினைக்காதீங்க.

pugalenthi
pugalenthi
`தினகரனை அடையாளம் காட்டியதே நான்தான்..!' - புகழேந்தி வார்த்தையால் கொதிக்கும் அ.ம.மு.க

போகுற இடத்துலையும், இருக்குற இடத்துலையும் நமக்கு முகாந்திரம் இல்லாம இருக்கக் கூடாது. நமக்கான எதிர்காலத்தையும், இடத்தையும் சரிபண்ணிட்டுதான் அடுத்த இடத்துக்குப் போகணும். நானும் அந்த ஐடியாவோடதான் இருக்கேன். என்னோட பட்டியல்ல உங்களையும் சேத்துக்குறேன். அட்ரஸ் இல்லாம 14 வருஷம் வெளியில் இருந்த தினகரன, ஊருக்கு காமிச்சது இந்தப் புகழேந்திதான். உண்மையைச் சொல்லணும்னா அம்மா இறந்தப்பக்கூட அவர் கிடையாது. யோசிச்சு முடிவுக்கு வருவோம். இது தொடர்பா நான் உங்க கிட்ட பேசுறேன்” என்று ஆறுதல் கூறுகிறார் புகழேந்தி.

`தினகரனுக்கு எதிராக பேசுகிறார் புகழேந்தி’ `கட்சியிலிருந்து வெளியேறுகிறார்’ என்றெல்லாம் கூறி, சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக புகழேந்தியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.``சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கே எதிராகச் செயல்படும் ஐடி விங்கை எங்கேயாவது பார்த்துருக்கீங்களா?. இங்க மட்டும்தான் இப்படி நடக்குது” என்ற அவர், ``கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகள், கட்சிக்காக சிறை சென்றவர்கள். கட்சியிலிருந்து தங்களை வெளியேற்ற என்ன காரணம் என்பது குறித்த அவர்களது மனக்குமுறல்களை, என்னிடம் அவர்கள் வெளிப்படுத்தினர்.

அ.ம.மு.க. பட்டியல் வெளியீடு... சிறையில் சசியைச் சந்தித்தாரா, தினகரன்?
புகழேந்தி
புகழேந்தி

இதுதொடர்பாக நான் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். இது தவறா? இந்த வீடியோவை, அ.ம.மு.க தொழில்நுட்பப் பிரிவு, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. என்னை அசிங்கப்படுத்தும்விதமாக பாதி வீடியோவை மட்டும் வெளியிட்டுள்ளனர். முழு வீடியோவை வெளியிட்டிருந்தால் உண்மை தெரிந்திருக்கும். `சசிகலாவுக்காத்தான் நாம் கட்சியில் இருக்கிறோம். வேறு கட்சிக்குச் செல்லவேண்டாம்’ என்றுதான் அவர்களிடம் கூறினேன். இதிலென்ன தவறு. அறை ஒன்றில் பேசிய வீடியோவை எனக்கு தெரியாமல் எடுத்து வெளியிடவேண்டிய அவசியம் என்ன? என்னை அசிங்கபடுத்தவே அப்படிச் செய்திருக்கிறார்கள். இது நாகரிகமற்ற செயல்” என்று முடித்துக்கொண்டார்.