Published:Updated:

“தமிழருவி மணியனைவிட ரஜினி எனக்கு நெருக்கம்!”

வெற்றிவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிவேல்

வரிந்துகட்டும் வெற்றிவேல்

‘ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் கட்சியை அறிவிப்பார்; அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைக்க மாட்டார்’ என்று தமிழருவி மணியன் சொன்னதாக வெளியான தகவல்கள், தமிழக அரசியலை தடதடக்கவைத்திருக் கின்றன! என்னதான் நடந்தது, அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் வெற்றிவேலிடம் பேசினோம்.

“தமிழருவி மணியனின் பேச்சுக்கு என்ன காரணம், கூட்டணி தொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடைபெற்றதா?”

“அதையெல்லாம் சொல்ல முடியாது. ‘ரஜினிகாந்த் டி.டி.வி.தினகரனோடு கூட்டணி அமைத்துக்கொண்டால், அது மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்’ என்று சொல்வதற்கு தமிழருவி மணியன் யார்? ரஜினியுடன் அ.ம.மு.க கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்று டி.டி.வி.தினகரன்தானே முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நான் பேச ஆரம்பித்தால் நிறைய பேச வேண்டியிருக்கும்.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“ஆனால், ‘ரஜினிக்கு நான் செய்தித் தொடர்பாளர் அல்ல’ என்று தமிழருவி மணியனே இந்தச் செய்தியை மறுத்திருக்கிறாரே?’’

“செய்தி வெளியாகி அடுத்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, ‘நான் அதைச் சொல்லவில்லை; இனிமேல் பேட்டியே கொடுக்க மாட்டேன்’ என்றெல்லாம் மறுத்திருக்கிறார். தமிழருவி மணியனைவிட ரஜினி எனக்கு நெருக்கம். நண்பர் என்பதற்காக ‘ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார்’ என்பதையெல்லாம் நான் சொல்லக் கூடாது. நட்பு வேறு; அரசியல் வேறு.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“தினகரன் மற்றும் சசிகலாவைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவருகிறார் என்றொரு பேச்சு இருக்கிறதே?’’

“முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை இதுவரை விமர்சித்ததில்லை என்பது உண்மை. ஆனால், தினகரனை பெயர் குறிப்பிடாமல் பல இடங்களில் விமர்சித்திருக்கிறார்.’’

வெற்றிவேல்
வெற்றிவேல்

“சசிகலா, அபராதத்தொகை 10 கோடி ரூபாயை இன்னும் செலுத்தவில்லை என்று செய்தி வெளியாகி யுள்ளதே?’’

“அதை கடைசி ஆண்டில்தான் கட்டுவார்கள். அந்தச் செய்தியை திட்டமிட்டுப் பரப்புகிறார்கள். இப்படி ஒரு தகவல் வெளியானால் அ.ம.மு.க-வின் ரியாக்‌ஷன் என்ன என்பதை அறியவே எங்களுக்குப் ‘பொறி’ வைக்கிறார்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இதைச் செய்வது யார், மாநில அரசா... மத்திய அரசா?’’

“இதில் மாநில அரசு, மத்திய அரசு என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டு தரப்புகளுமே இருக்கின்றன.’’

“ஆனால், ‘சிறையில் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படும் வழக்கில் சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்’, ‘நன்னடத்தை விதிகள் சசிகலா வழக்குக்குப் பொருந்தாது’ என்றும் சொல்கிறார்களே?’’

“இதை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட வினய்குமார் தலைமையிலான கமிஷனில், ‘சசிகலா வாக்கிங் சென்றார், ஷாப்பிங் போனார் என்றெல்லாம் நான் சொல்லவேயில்லை’ என்று ஐ.ஜி-யான ரூபாவே மறுத்துவிட்டார். ‘சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது’ என்று நீதிமன்றம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.”