Published:Updated:

அ.தி.மு.க ரத்தத்தை தானம் செய்துவிட்டாரா தங்க தமிழ்ச்செல்வன்?

சி.ஆர்.சரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
சி.ஆர்.சரஸ்வதி

போட்டுத்தாக்கும் சி.ஆர்.சரஸ்வதி

அ.தி.மு.க ரத்தத்தை தானம் செய்துவிட்டாரா தங்க தமிழ்ச்செல்வன்?

போட்டுத்தாக்கும் சி.ஆர்.சரஸ்வதி

Published:Updated:
சி.ஆர்.சரஸ்வதி
பிரீமியம் ஸ்டோரி
சி.ஆர்.சரஸ்வதி

றிவாலயத்துக்கு தங்க தமிழ்ச்செல்வன் வந்திருந்த நேரமது. வாசலில் காத்திருந்த தேனி மாவட்ட அ.தி.மு.க தொண்டர் ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘‘புதுசா எடுத்த நாலு அ.ம.மு.க கரை வேட்டிதாங்க வேஸ்ட்டா போயிடுச்சு. தூக்கிப்போட்டுட்டு அண்ணன் பின்னாடி எப்பவும் நிப்போம்...’’ என்று கட்சித்தாவலை நாலே வேட்டியில் இலகுவாக முடித்தார். ஆனால், அ.ம.மு.க-வில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் இவ்வளவு இலகுவாக இல்லை. பிரிந்து செல்பவர்கள் தலைமை மீது வைக்கும் விமர்சனங்கள் கடுமையாக உள்ளன. இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறது அ.ம.மு.க? கட்சியின் புதிய கொள்கைப் பரப்புச் செயலாளரான சி.ஆர்.சரஸ்வதியைச் சந்தித்துப் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘உங்கள் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்த பலர் மாற்றுக் கட்சிகளுக்குப் போய்விட்டார்கள். அ.ம.மு.க பலவீனப்பட்டிருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது?’’

‘‘எங்கக் கட்சியை ‘லெட்டர் பேடு கட்சி’ என்றவர்கள் பிறகு எதற்குப் பணம், பதவி என ஆசை வார்த்தை கள் கூறியும் மிரட்டியும் எங்கள் ஆட்களை இழுக்கிறார்கள். அ.ம.மு.க-விலிருந்து வருபவர் களை தென்காசி வரைக்கும் போய் முதல்வரும், துணை முதல்வரும் கட்சியில் சேர்க்கிறார்கள் என்றால், பலமாக இருப்பது அ.ம.மு.க-வா, அ.தி.மு.க-வா? இது தொண்டர்களால் கட்டமைக்கப் பட்ட இயக்கம். ஒரு சிலர் வெளியேறுவதால் துவண்டுவிடாது. இந்தத் தேர்தலில் அ.ம.மு.க தோற்கவில்லை, தோற்கடிக்கப் பட்டிருக்கிறது.

அ.தி.மு.க ரத்தத்தை தானம் செய்துவிட்டாரா தங்க தமிழ்ச்செல்வன்?

கிட்டத்தட்ட 1,900 பூத்துகளில் அ.ம.மு.க வாக்குகள் பூஜ்யமாகக் காட்டப்படுகிறது. எங்கள் கட்சி வேட்பாளர்களின் பெயர் கொண்ட பலர் சுயேச்சைகளாக நிறுத்தப்பட்டு, சிலருக்கு குக்கர் சின்னமும் வழங்கப் பட்டது. இவையெல்லாம் திட்ட மிட்டு நடைபெற்ற சதிதானே?’’

‘‘நீங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சதி நடந்திருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால், இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்துவதை நிறுத்திவிட்டு, தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உங்களிட மிருந்து பிரிந்துசென்ற தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறாரே?’’

‘‘மதுரையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுசென்ற போது, பெட்டியை மாற்றப்போகிறார்கள் எனக் கூப்பாடு போட்டவர் யார்? ‘இனி தேர்தலிலேயே நிற்கப்போவதில்லை, 300 கோடி செலவழித் துள்ளார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது’ என பேட்டி கொடுத்த வர் யார்? இதே தங்க தமிழ்ச்செல்வன்தானே? அ.ம.மு.க கொள்கையில்லாதக் கட்சி என்பவர், எதற்காக இரண்டு வருடங்கள் இங்கே இருந்தார்? எங்கக் குடும்பமே அ.தி.மு.க ரத்தம் என்றவர், இப்போது அந்த ரத்தத்தை தானம் செய்து விட்டாரா?’’

‘‘ஜெயலலிதா பாணியில், அடிமட்ட நிர்வாகிகள் இருவரைக் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. இது அம்மா வழியில் நடக்கும் அரசு என்று எடுத்துக்கொள்ளலாமா?’’

‘‘ராஜ்யசபா சீட்டுக்குப் பலரும் அங்கு முட்டி மோதியுள்ளனர். பி.ஜே.பி கோபித்துக்கொள்ளும் என்பதற்காக, தமிழ்மகன் உசேனுக்கும் அன்வர் ராஜாவுக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட் ஒதுக்கவில்லை. இப்போது வேலூரில் தேர்தல் நடைபெறப் போகிறது. அங் குள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக, வேலூரைச் சேர்ந்தவருக்கு சீட் ஒதுக்கியுள்ளனர். அந்த முகம்மது ஜான் என்பவரை நானே பார்த்ததில்லை.

முதலமைச்சரின் மாவட்டத்தைச் சேர்ந்த நகரச் செயலாளருக்குத்தான் சீட் ஒதுக்க வேண்டுமா? தன் ஆட்களுக்கே சீட் கொடுக்க வேண்டுமென்று எடப்பாடி செயல்பட்டுள்ளார். இதுபோல, ஆள் பார்த்து சீட் வழங்கும் பழக்கம் அம்மாவிடம் இருந்ததில்லை.’’

‘‘மண்டலப் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் குறுநில மன்னர்களாகச் செயல்படுகிறார்கள் எனக் கட்சி யில் இருந்து வெளியேறுபவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே... பண்ணையார் கட்சியாக அ.ம.மு.க மாறிவிட்டதா?’’

‘‘எங்கத் தலைவர் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. கட்சியை விட்டு வெளியேறுவதற்கு அவர்களுக்கு ஒரு காரணம் தேவை. அம்மா இருந்தபோது கோஷ்டிப்பூசல் இருந்ததில்லையா? எல்லாக் கட்சியிலும் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்யும். கட்சியில் சேர்ந்தது சின்னம்மாவுக் காகவா... மண்டலப் பொறுப்பாளர்களுக்காகவா? எந்தக் குறையாக இருந்தாலும் அதைத் தலைமை யிடம்தான் தெரிவிக்க வேண்டும். அதைக் கேட்க டி.டி.வி.தினகரன் தயாராகத்தான் இருக்கிறார். நிர்வாகிகளால் அவரை சுலபத்தில் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், கட்சி மாறுவதற்காகப் பொய் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.’’

டி.டி.வி.தினகரன், தங்க தமிழ்ச்செல்வன்
டி.டி.வி.தினகரன், தங்க தமிழ்ச்செல்வன்

‘‘சிறையிலிருந்து சசிகலா விடுதலை அடைந்தவுடன் அ.ம.மு.க-வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?’’

‘‘சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க-வை சின்னம்மா கைப்பற்றுவார். நீதிமன்றத் தில் மறுசீராய்வு மனு செய்துள்ளோம். இதுபோக, இரட்டை இலை தொடர்பாக வெற்றிவேல் தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு நிர்வாகிகளால் சட்டப்படி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சின்னம்மா தான். கடந்தத் தேர்தலின்போது, கட்சி யைப் பதிவு செய்தால்தான் பொதுச் சின்னம் வழங்கப்படும் என நீதிமன்றம் கூறியது. அதனால்தான் அ.ம.மு.க-வை பதிவு செய்தோம். அ.தி.மு.க-வை விரைவில் மீட்டெடுப்போம்.’’

‘‘இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப் படும் என்று இரண்டு வருடங்களாகக் கூறி வருகிறீர்கள். ஆட்சி நிலைத்துச் செல்கிறதே?’’

‘‘மோடி என்கிற பிக்பாஸ் இருக்கும் வரை எதுவும் நடக்காதுங்க. இந்த ஆட்சி மீது போடப் பட்ட ஊழல் வழக்குகள் என்னானது? குட்கா வழக்கின் நிலை என்ன? 22 இடங்களில் நின்றவர் கள், ஆட்சியைத் தக்கவைக்கத் தேவைப்படும் ஒன்பது இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது எப்படி? இது பி.ஜே.பி-யின் பினாமி அரசு. அவர்கள் தயவு இருக்கும் வரை எதுவும் நடக்காது.’’