Published:Updated:

“தவறான கத்தியைக் கையில் எடுத்திருக்கிறார் எடப்பாடி!”

டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

பெரும்பான்மை என்று சொல்லும்போது சரிதான். ஆனால், அது முறையாக நடந்ததா? அந்தப் பெரும்பான்மை எப்படி வந்தது?

“தவறான கத்தியைக் கையில் எடுத்திருக்கிறார் எடப்பாடி!”

பெரும்பான்மை என்று சொல்லும்போது சரிதான். ஆனால், அது முறையாக நடந்ததா? அந்தப் பெரும்பான்மை எப்படி வந்தது?

Published:Updated:
டி.டி.வி.தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
டி.டி.வி.தினகரன்

தமிழக அரசியலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பரபரக்க வைத்தது அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை விவகாரம். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி பலரையும் கட்சியிலிருந்து நீக்கிக்கொண்டிருக்க, ‘அ.தி.மு.க-வை மீட்பதே தனது லட்சியம்’ என்று கட்சி தொடங்கிய டி.டி.வி.தினகரன் இதை எப்படிப் பார்க்கிறார்? அவரது அடுத்தகட்ட நகர்வுகள் என்ன? தினகரனிடம் பேசினேன்.

“அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வாகியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு நீங்கள் சொல்லும் செய்தி?”

“முதலில் அவருடைய விபரீத ஆசைக்குக் கிடைத்திருக்கும் தற்காலிக வெற்றிக்கு வாழ்த்துகள். புரட்சித் தலைவர் ஆரம்பித்த இயக்கம். அதன்பின் எல்லோரும் ஒருமனதாக அம்மாவைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த இயக்கத்தில் இப்படி அடிதடி, கலாட்டா என்பதை அ.தி.மு.க-வின் எந்த உண்மைத் தொண்டனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். எத்தனையோ சதிகள், வஞ்சகச் சூழ்ச்சிகள், சாணக்கியத்தனம் என்கிற பெயரில் எடப்பாடி தனக்கே தெரிந்த துரோக பாணியில் இன்று பதவிக்கு வந்திருக்கிறார் என்றுதான் எல்லோரும் பேசுகிறார்கள். முதலமைச்சர் பதவி கொடுத்தபோது தவழ்ந்து வந்தவர், இன்று அந்தப் பதவி கொடுத்தவர்களைப் பார்த்து ‘அவர்கள் எல்லாம் யார்’ என்று கேட்கிறார். நான்கு ஆண்டுகள் அந்த ஆட்சியைக் காப்பாற்றியவர்கள், ‘தவறு செய்துவிட்டோம்’ என்று இன்று உணர்ந்திருப்பார்கள். ஓ.பி.எஸ்-ஸும் அதை உணர்வார். அன்று ஓ.பி.எஸ் ஒரு வாரம் மட்டும் பொறுமையாக இருந்திருந்தால் இன்று இந்த மாதிரி நிகழ்வு நடந்திருக்காது. இந்திய அரசியல் வரலாற்றில் ஜூலை 11 ஒரு கறுப்பு தினமாகத்தான் பார்க்கப்படும். இருந்தாலும் எடப்பாடிக்கு வாழ்த்துகள். வருங்காலத்தில் எப்படி இந்தப் பதவியைத் தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.”

“தவறான கத்தியைக் கையில் எடுத்திருக்கிறார் எடப்பாடி!”

“பெரும்பான்மை உறுப்பினர்கள் விருப்பப்படி நடந்த பொதுக்குழுவில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தேர்வு செல்லாது என்று சொல்ல முடியுமா?”

“பெரும்பான்மை என்று சொல்லும்போது சரிதான். ஆனால், அது முறையாக நடந்ததா? அந்தப் பெரும்பான்மை எப்படி வந்தது? பொதுக்குழுவைக் கூட்டியது சட்டப்படி தவறு என்றுதானே முறையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் இதை நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.”

“ஓ.பி.எஸ்-ஸைப் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அது யாராக இருக்கும். நீங்கள் ஓ.பி.எஸ்-ஸுடன் பேசியது உண்டா?”

“ஓ.பி.எஸ்-ஸை 2017 ஜூலை 12-ம் தேதி சந்தித்ததுதான். அதன்பின் ஒருநாள்கூட பேசியதில்லை. பேசினால் பேசியதாகச் சொல்வேன். என்னைத் தொண்டர்கள் இயக்குவதுபோல், எடப்பாடியைப் பல பேர் இயக்குவதுபோல், பன்னீர்செல்வத்தையும் யாரோ அரசியலில் இயக்கலாம்.”

“62 எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி அணி, 3 எம்.எல்.ஏ-க்களுடன் ஓ.பி.எஸ் அணி, எம்.எல்.ஏ-க்களே இல்லாத அ.ம.மு.க... இந்த மூன்றில் எது உண்மையான அ.தி.மு.க?”

“நாங்கள் என்றைக்குமே எங்களை அ.தி.மு.க என்று சொல்லவில்லையே! அ.தி.மு.க என்பது தலைவரின், அம்மாவின் கட்சி. இன்று எங்களுக்கும் அ.தி.மு.க-விற்கும் சம்பந்தமில்லை. அம்மாவின் பெயரில் ஆரம்பித்த எங்கள் இயக்கத்தில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள்தான் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றால் எடப்பாடி பின்னால் என்றைக்கோ போயிருக்கலாம். ஆனால், அம்மாவின் கொள்கைகளை, லட்சியங்களை நிலைநாட்ட அ.ம.மு.க-வால்தான் முடியும் என்று தொண்டர்கள், நிர்வாகிகள் என்னோடு இன்று இருக்கிறார்கள்.”

“சசிகலா தனியாகச் சுற்றுப்பயணம் போகிறார். நீங்களும் தனியாக அரசியல் நகர்வுகளில் இருக்கிறீர்கள். உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறதா?”

“பலமுறை சொல்லிவிட்டேன். இருந்தாலும் ஆனந்த விகடனுக்குச் சொல்கிறேன். எங்களுக்குள் எந்தப் பாகுபாடும் கிடையாது. அவர் எங்கள் சித்தி. சட்டரீதியாகப் போராடி க்ளைமில் இருக்கிறார். நான் ஜனநாயகரீதியாக அரசியல் களத்தில் இருக்கிறேன். எங்கள் இலக்கு அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்பதுதான்.”

“இன்னமும் உங்கள் ஸ்லீப்பர் செல் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களா?”

“நிச்சயம் இருக்கிறார்கள். நேற்று இரவுகூட ஐந்தாறு ஸ்லீப்பர் செல், நண்பர்களாக வந்து பார்த்துவிட்டு அங்கு நடப்பதைச் சொல்லி வருத்தப்பட்டார்கள். நாங்கள் பெங்களூரிலிருந்து வந்த போது தட்சிணாமூர்த்தி எப்படி கார் எடுத்துக்கொண்டு வந்தாரோ அப்படி தேவையான நேரம் வரும்போது அவர்கள் வருவார்கள்.”

“அ.தி.மு.க-வின் தற்போதைய நிலைக்கு யார் காரணம்?”

“இப்போது அ.தி.மு.க-வில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியிலிருந்து அத்தனை நிர்வாகிகளும்தான் காரணம்.”

“அ.தி.மு.க இன்று சாதிரீதியாகப் பிளவுபட்டுள்ளதா?”

“தவறான கத்தியைக் கையில் எடுத்திருக்கிறார் எடப்பாடி. கத்தி எடுத்தவன் கத்தியில்தான் வீழ்வான். இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, அனைத்துத் தரப்பு மக்களுக்குமாக சாதி மத பேதமின்றி புரட்சித் தலைவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்மாவும் அதையே தொடர்ந்தார். இன்று நடக்கும் இந்தச் சம்பவங்களைப் பார்க்கும்போது சாதிவெறியைத் தங்கள் சுயநலத்திற்காகக் கிளப்பிவிட்டு, மக்கள் ஒற்றுமைக்குத் தமிழ்நாட்டில் பிரச்னை வந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.”

“தவறான கத்தியைக் கையில் எடுத்திருக்கிறார் எடப்பாடி!”

“ஜெயலலிதா மறைவிற்குப் பின் அ.தி.மு.க-வில் பா.ஜ.க., பிரதமர் மோடி தலையீடு உள்ளதாகக் குற்றச்சாட்டு வருகிறதே?”

‘‘ஆடிட்டர் குருமூர்த்தி முன்பு, ‘நான் சொல்லித்தான் ஓ.பி.எஸ் தியானத்திற்குப் போனார்’ என்று சொன்னார். ‘பிரதமர் சொல்லித்தான் நான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்’ என்று ஓ.பி.எஸ் இப்போது சொல்லியிருக்கிறார். எனவே இதை ஒரு தலையீடு என்று எடுத்துக்கொள்ளலாம்; அல்லது ஒரு கூட்டணிக் கட்சியின் அன்பாகக் கூட இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், நாங்கள் வரக் கூடாது என்று பா.ஜ.க நினைத்தது. அதுதான் உண்மை. ‘நீங்கள் வேண்டாம் என்று பா.ஜ.க-வில் சொல்கிறார்கள்’ என என்னிடம் வேலுமணி, தங்கமணி என எல்லோரும் சொன்னார்கள். பா.ஜ.க-வில் சொன்னார்களா என்று தெரியாது. அவர்கள் சொன்னதை வைத்துச் சொல்கிறேன்.”

“கொடநாடு கொலை வழக்கு மீண்டும் இப்போது பேசப்படுகிறதே?”

“கொடநாடு வழக்கில் காவல் துறையும், அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு இருந்த ஆவணங்களைத் திருடத்தான் அனுப்பினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களே சொல்கிறார்கள். சம்பந்தமே இல்லாமல் எங்கள் சித்தி சம்பந்தமான ஆவணங்களை எல்லாம் இந்த வழக்கைத் தொடர்புப்படுத்தி வருமான வரித்துறை ரெய்டு செய்து எடுத்துச் செல்கிறார்கள். இதையெல்லாம் வைத்து சரியான முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் ‘கொடநாடு கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம், ஊழல் செய்த அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுப்போம்’ என்றார்கள். இன்றுவரை அது எதுவும் நடக்கவில்லை.”

“தி.மு.க ஆட்சி பற்றி உங்கள் மதிப்பீடு?”

“ ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்லி திராவிடர்களாகிய நமக்கெல்லாம் தலைக்குனிவு ஏற்படுத்தும் வகையில்தான் தி.மு.க ஆட்சி இருக்கிறது. தி.மு.க சொன்னதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. வெறும் விளம்பரத்தில் இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி ஆட்சிமீதிருந்த அதிருப்தி, கோபத்தில் மக்கள் தி.மு.க-விற்கு ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அதைச் சரியான முறையில் பயன்படுத்தி, தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே நாங்களும் அவர்களுக்கு ‘ஜெ’ போடுவோம்.”