விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கியது, அடுத்தடுத்து தாவும் கட்சி நிர்வாகிகள் என தொடர்ந்து விரியும் காட்சிகளால், அ.ம.மு.க தளர்ச்சியடைகிறதோ என்ற கேள்வி எழுகிறது. இப்படி அரசியல் தொடர்பான கேள்விகளுடன் அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேலைச் சந்தித்தோம்.

‘‘சின்னம் ஒதுக்காததைக் காரணம் காட்டி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்குவது, உங்களை பலவீனப் படுத்தாதா?’’

‘‘இது பலவீனமாகாது. நாங்க இடைத்தேர்தல்ல போட்டியிட்டு ஜெயிச்சா, பெரிய மாற்றம் ஏதும் வந்துடப்போறதில்ல. எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல்களுக்கே உச்ச நீதிமன்றம் வரைக்கும் போய்தான் சின்னம் வாங்கிட்டு வந்தோம். இந்த நடைமுறை ரொம்ப தலைவலி. இதனால தொண்டர்களும் சோர்வாகிடக் கூடாது. தேர்தல் ஆணையத்துல கட்சியைப் பதிவுசெய்திருக்கோம். உள்ளாட்சித் தேர்தலுக்குள்ள சின்னம் கிடைத்திடும்னு நம்புறோம். அதனாலத்தான் இடைத்தேர்தல்ல போட்டியிடல.’’

‘‘கட்சியைப் பதிவுசெய்துவிட்டீர்கள். கட்டமைப்பு எந்தளவில் இருக்கிறது?’’

‘‘எங்களுக்கு பெரிய பிரச்னையே ‘எலெக்ட்ரானிக் வாக்கு இயந்திர தீவிரவாதம்’தான். நடந்து முடிஞ்ச பெரம்பூர் இடைத்தேர்தல்ல, என் பூத்துல இருக்கும் 41 குடும்பங்கள் எனக்கு வாக்களிச்சிருக்கு. ஆனா, வெறும் 11 வாக்குகள்தான் விழுந்ததா வாக்கு இயந்திரம் காட்டுது. மொத்தமா 6,100 வாக்குகள்தான் எனக்குக் கிடைச்சதா சொல்றாங்க. புனல் வெச்சு பிரசாரம் செய்த காலத்துல இருந்து, ஹைடெக் பிரசாரம் வரைக்கும் நான் பார்த்திருக்கேன். இது புதுவகையான தில்லுமுல்லா இருக்கு. 2019 நாடாளுமன்றத் தேர்தல்ல, அ.ம.மு.க-வுக்கு 90 லட்சம் வாக்குகள் கிடைச்சிருக்கு. அத்தனையையும் மறைச்சுட்டாங்க.

இனிமே அது நடக்காத மாதிரி எங்க கட்சி உறுப்பினர்களின் அடையாள அட்டையோடு ஆதாரையும் இணைக்கிறோம். தில்லுமுல்லு செஞ்சு எங்க ஓட்டை குறைச்சா, ஆதாரத்தோடு கோர்ட்டுக்குப் போவோம். கட்சியின் உள்கட்ட மைப்பை பலப்படுத்திக்கிட்டே உள்ளாட்சித் தேர்தலுக்கும் தயாராகுறோம்.’’

‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்புமனுவில் இருந்தது ஜெயலலிதா கைரேகை அல்ல என்பதால், `அ.தி.மு.க-வைத் தடைசெய்ய வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்தில் தி.மு.க மனு அளித்துள்ளதே?’’

‘‘வேட்புமனு தாக்கலான பிறகு எடுக்கப்பட்ட வீடியோவைத்தான் நான் வெளியிட்டேன். அதுல அம்மா ஜூஸ் குடிக்கிற மாதிரியான காட்சிகளும் இருந்துச்சு. ஹாஸ்பிடல்ல அட்மிட்டான பிறகுதான், காவிரிப் பிரச்னைக்காக எல்லா செயலாளர்களையும் அழைச்சு மருத்துவமனையில அம்மா கூட்டம் போட்டாங்க. இது ஓ.பி.எஸ் உட்பட எல்லோருக்குமே தெரியும். இதுக்குமேல அம்மாவோட உடல்நிலையைப் பத்தி என்ன ஆதாரம் வேணும்? தி.மு.க எங்க போனாலும், பி.ஜே.பி தயவு இருக்கிறதால அ.தி.மு.க-வுக்கு தடை வராது.’’

‘‘சசிகலா எப்போது விடுதலையாவார்?’’

‘‘அண்ணா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள்களுக்கு நாம கைதிகளை விடுதலை பண்ற மாதிரி, ஒவ்வொரு ஜெயிலுக்கும் ஒவ்வொரு சட்டவிதி இருக்கு. கன்னட மொழியைக் கத்துக்கிட்டா இவ்வளவு லீவ், வருஷத்துக்கு இவ்வளவு லீவ்னு கர்நாடக விதிகள் இருக்கு. அதன்படி சீக்கிரமே சின்னம்மா வெளியே வருவார்.’’

‘‘ `எடப்பாடியும் சசிகலாவும் மீண்டும் இணைந்து செயல்படுவார்கள்’ என அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறதே?’’

‘‘ஒரே ஒரு கேள்வி கேக்குறேன். ‘என் தம்பி எடப்பாடியை முதலமைச்சரா முன்மொழி கிறேன்’னு சின்னம்மா சொன்னாங்க. சட்டசபை யில எங்க குடும்பத்து ஆளுங்களையெல்லாம் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அசிங்கப்படுத்தினாங்க. அத்தனையையும் பொறுத்துக்கிட்டு, எடப்பாடிக்கு ஆதரவா ஓட்டு போட்டோம். மத்திய அரசு அழுத்தம் கொடுத்தவுடனே, பொதுச்செயலாளர் பதவியிலயிருந்து சின்னம்மாவ எடுத்தீங்க. எங்க 18 பேரை தகுதிநீக்கம் செஞ்சீங்க. இதுக்கு அப்புறமும் சின்னம்மாவுக்கும் எடப்பாடிக்கும் ஒப்பந்தம் வரும்னு நினைக்கிறீங்களா? இத்தனை வருஷமா சிறைச்சாலையிலேயே இருக்குறாங்க. ஒருவாட்டிகூட ஒருத்தரும் போய்ப் பார்க்கல. பிறகு எப்படி ஒட்டு உறவு வரும்?’’

‘‘சசிகலாவை எதிர்த்து எங்கேயுமே எடப்பாடி பேசவில்லையே?’’

‘‘உரிச்சு எடுத்துடுவோம்ல. அந்த பயம் இருக்கிறதுனாலத்தான் எதுவும் பேச மாட்டேங் கிறார். இந்த அ.தி.மு.க ஆட்சி கலைஞ்ச உடனே, வரிசையா வந்து மன்னிப்பு கேட்பாங்க பாருங்க. என் வீட்டுக்கே வந்து `சின்னம்மாகிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுங்க’னு கேட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல. மன்னிக்கவே முடியாத நபர்கள்னு சில பேரு இருக்காங்க. அவங்களைத் தவிர மத்தவங்களை ஏத்துக்குவோம்.’’

‘‘நான்தான் உண்மையான அ.ம.மு.க என்று புகழேந்தி கூறுகிறாரே?’’

‘‘அவர் பெயர்ல இந்தக் கட்சியில என்ன இருக்குது? அடிக்கடி, ‘அம்மாவுக்கு ஜாமீன் கையெழுத்து நான்தான் போட்டேன்’னு சொல்லிட்டு இருக்கார். அன்றைய நிலைமைக்கு கர்நாடகா மாநிலச் செயலாளரா இருந்ததால, இவரை கையெழுத்து போடைவெச்சாங்க. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை அவர் எதிர்பார்த்தார். கண்ட இடத்துல கண்டதைப் பேசுகிறவருக்கு எப்படி பதவி கொடுக்க முடியும்?’’

‘ `ரஜினி கட்சி தொடங்கினால், டி.டி.வி-யைப்போல் நாசமாகிவிடுவார்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?’’

‘‘‘இவர் பெரிய ஜோக்கர். ஜெயக்குமார் செஞ்ச வேலைக்கெல்லாம் அம்மா இருந்திருந்தா, அவரை கழுவுல ஏத்தியிருப்பாங்க.’’