Published:Updated:

வேலூர்: மறு தேர்தலையும் புறக்கணித்த அம்முண்டி ஊராட்சி மக்கள்... என்ன சொல்கிறார்கள்?

அம்முண்டி கிராம மக்கள்

பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்படாத காரணத்தால், இரண்டாவது முறையாக தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள் அம்முண்டி ஊராட்சி மக்கள்.

வேலூர்: மறு தேர்தலையும் புறக்கணித்த அம்முண்டி ஊராட்சி மக்கள்... என்ன சொல்கிறார்கள்?

பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்படாத காரணத்தால், இரண்டாவது முறையாக தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள் அம்முண்டி ஊராட்சி மக்கள்.

Published:Updated:
அம்முண்டி கிராம மக்கள்

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்திலிருக்கும் அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஊராட்சியில் மொத்தம் 2,045 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவற்றில், பட்டியல் சமூக வாக்குகள் மொத்தமே மூன்றுதான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொதுப்பிரிவினரின் வாக்குகள் பெரும்பான்மையாக இருப்பதால், பட்டியல் சமூகத்தவருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து ஊர்கூடி தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால், அம்முண்டி ஊராட்சியில் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில், தேர்தல் நடைபெறாமல் காலியாக இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கான மறுதேர்தல் ஜூலை 9-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

அம்முண்டி கிராம மக்கள்
அம்முண்டி கிராம மக்கள்

அதன்படி, அம்முண்டி ஊராட்சிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஆனால், தலைவர் பதவிக்கும், உறுப்பினர்களுக்கும் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இது குறித்து, அம்முண்டி கிராம மக்கள் கூறுகையில், ‘‘அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இரண்டாவது முறையும் பொதுப்பிரிவினர் அதிகமாக உள்ள கிராமத்தில் பட்டியல் சமூகத்தவருக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கும் வரை நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம்’’ என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!