Published:Updated:

திமுக ஓராண்டு ஆட்சி: வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? - சொன்னதும் செய்ததும்!

திமுக | முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு ஆகிவிட்டது. பல்வேறு வாக்குறுதிகள் அளித்து, அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம் என திமுக-வினரும் எதையும் நிறைவேற்றவில்லை என அதிமுக-வினரும் பேசி வருகிறார்கள். உண்மை நிலவரம் என்ன... ஓர் அலசல்!

திமுக ஓராண்டு ஆட்சி: வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? - சொன்னதும் செய்ததும்!

திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு ஆகிவிட்டது. பல்வேறு வாக்குறுதிகள் அளித்து, அதில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம் என திமுக-வினரும் எதையும் நிறைவேற்றவில்லை என அதிமுக-வினரும் பேசி வருகிறார்கள். உண்மை நிலவரம் என்ன... ஓர் அலசல்!

Published:Updated:
திமுக | முதல்வர் ஸ்டாலின்
திமுக ஓராண்டு ஆட்சி
திமுக ஓராண்டு ஆட்சி

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஒரு மாதத்துக்கு முன்பு பேசிய முதல்வர் ஸ்டாலின், `ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளாகச் சொன்ன 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றைச் செய்துவிட்டோம்’ என சட்டப்பேரவையில் பேசியிருந்தார். இப்போது சுமார் 270-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தி.மு.க-வினர் பேசி வருகிறார்.

அதன்படி, ``பெட்ரோலுக்கான விலையைக் குறைத்தது, மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்தது, மகளிருக்கும் திருநங்கைகளுக்கும் இலவசப் பேருந்து வசதி, விவசாய நகைக்கடன் தள்ளுபடி, 4,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு, வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல், இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குதல், மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது, அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தியது எனத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது முதல் சொல்லாதது வரை பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கின்றோம்” என லிஸ்ட் போடுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எதிர்க்கட்சித் தரப்பிலோ, ``தி.மு.க எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க-வின் திட்டங்களுக்குப் புதுப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. இந்த ஓராண்டு ஆட்சிதான் அடுத்து நடக்கவுள்ள நான்கு ஆட்சிக்கான சாம்பிள்” எனக் குற்றம் சாட்டுகிறார்கள். ஓராண்டில் தி.மு.க செய்ததும் செய்யாததும் என்ன?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓராண்டு தி.மு.க ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்வி அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை சத்யனிடம் கேட்கோம்... ``ஈ.சி.ஆர் சாலைக்குக் கலைஞர் பெயர் வைப்பது, ஓமந்தூரார் மருத்துவமனையில் கலைஞருக்குச் சிலை வைப்பது, அம்மா உணவகங்களை மூடுவது, தாலிக்குத் தங்கம் தருவதை நிறுத்துவது, விளைந்த நெல்லைக் கொள்முதல் செய்யாமல் சாலையில் போட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது என எதையெல்லாம் சொல்லவில்லையோ அதையெல்லாம் செய்திருக்கிறார்கள். 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என எண்ணிக்கை சொல்கிறார்கள். ஆனால், என்னென்ன என சொல்ல மறுக்கிறார்கள். செய்திருந்தால்தானே சொல்வதற்கு. இதைத்தானே எடப்பாடியாரும் கேட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஐந்து ஆண்டு காலம், பத்தாண்டு காலம் எனப் பிரித்து வாக்குறுதிகள் அளித்தார்கள். மாநில உரிமையை மீட்க வேண்டும், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற வேண்டும் இதற்கெல்லாம் இந்தக் கால அளவா சொன்னார்கள். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே இவற்றிற்குத் தான் என்றார்களா இல்லையா? எந்தத் தேதி என்று சொன்னோமா எனத் தமிழ்நாடு நிதி அமைச்சர் சொல்லிவிட்டாரே. இதன்பின் அவர்களிடம் என்ன கேட்பது.

மகளிருக்கு இலவசம் என்றார்கள், பின் ஒயிட் போர்டு மட்டும்தன் என்றார்கள், தகுதியானவர்களுக்கு மட்டும்தான் நகைக்கடன் தள்ளுபடி என்கிறார்கள். பெட்ரோல் விலை 94 ரூபாயாகவும், டீசல் விலை 93-வும் இருந்தபோது தி.மு.க கொடுத்த வாக்குறுதிதான் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் 89 ரூபாய்க்குக் கிடைக்கும் என்றுதானே ஒரு சாமான்யன் நினைத்திருப்பான். ஆனால், இவர்கள் ஒரு பெட்ரோல், டீசல் விலை 103 ரூபாய் ஆகும் வரை காத்திருந்து வெறும் 3 ரூபாயைக் குறைக்கிறார்கள். உண்மையில் இவர்கள் 14 ரூபாய் குறைத்து 89 ரூபாய்க்குக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இவர்களின் எந்த வாக்குறுதியிலும் மத்திய அரசு செய்தால் நாங்கள் இதைச் செய்வோம் என எதையும் சொல்லவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம் என்றுதான் சொன்னார்கள்.

கோவை சத்யன்
கோவை சத்யன்

ஒன்றியம் எனப் பெயர் வைத்துக்கொண்டு எல்லாம் இவர்களே செய்து கொள்ள வேண்டியதுதானே. தேவை என்றால் மத்திய அரசு பெயரைச் சொல்லி திசை மாற்றுகிறார்கள். தமிழர்களின் படகுகள் ஏலம் விட்டுக்கொண்டிருக்கும் போது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார் ஸ்டாலின். எடப்பாடியார் எழுதும்போது அடிமை அரசு என்றீர்கள். வந்த இரண்டு மாதத்தில் நாங்கள் எழுதியதைவிட ஒரு மடங்கு அதிகமாகக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2011-ல் 1 லட்சம் கோடி கடனில் நாங்கள் ஆட்சியை விட்டுவிட்டுச் சென்றோம். அ.தி.மு.க ஆட்சியை 4.80 லட்சம் கோடி என நிதி அமைச்சர் சொல்கிறார். அப்படியானால் மொத்தம் 3.80 லட்சம் கோடி கடன். அப்படியானால் ஆண்டுக்கு வெறும் 38 ஆயிரம் கோடி கடன்தான் நாங்கள் வாங்கியது. ஆனால் ஆட்சி அமைத்த 10 மாதத்தில் 1.08 லட்சம் கோடி, அடுத்து வாங்கப் போகும் கடன் 1.20 லட்சம் கோடி. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டு அ.தி.மு.க வாங்கியதைவிட ஒன்றரை மடங்கு கடன் வாங்கியிருக்கிறீர்கள். அடுத்து மூன்றரை மடங்கு வாங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். என்னங்க ஆட்சி இது. இவ்வளவு கடன் வாங்கியும் நிலக்கரிக்கு காசு கொடுக்க முடியலை, செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரித்து விட்டார்களா? க்ளோபல் டெண்டர் போட்டு தடுப்பூசி வாங்கிவிட்டார்களா?,

தமிழக மீனவர்களின் படகுகளை வாங்கிக் கொடுத்து விட்டார்களா? ஐந்து ஆயிரம் மீனவர்களுக்குக் கொடுத்துவிட்டார்களா? துபாய் சென்றுவந்தார்களே என்ன கொண்டு வந்தார்கள்? இதுக்குப் பெயர்தான் ஆட்சியா? இதையெல்லாம் எங்கு சென்று சொல்வது? ஜெயராஜ், பெனிக்ஸ்-க்கும் பொள்ளாச்சி சம்பவத்துக்கும் அந்தப் பொங்கு பொங்கினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த ஏழாவது மாதத்தில் 660 கொலைகள், இது அவர்கள் கொடுத்த தரவு. இப்போது ஆயிரத்தைத் தாண்டியிருக்கும். காவல்துறை கட்டுப்பாட்டில் ஆறு கொலைகள் நடந்திருக்கின்றன. இந்தளவு சட்டம் ஒழுங்கி தி.மு.க ஆட்சியில் சந்தி சிரிக்கிறது.

துபாயில் முதல்வர் ஸ்டாலின்
துபாயில் முதல்வர் ஸ்டாலின்

என்னெல்லாம் சொன்னார்களோ அதைச் செய்யவில்லை. சொல்லாததெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க செய்ததற்கு எல்லாம் கலைஞர் எனப் பெயர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.” எனப் பல்வேறு கேள்விகளோடு விமர்சனங்களையும் முன்வைத்தார்.

தி.மு.க என்ன செய்தது என அக்கட்சியின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம். தி.மு.க செய்தவற்றைப் பட்டியலிட்டவர், “2,860 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் மீட்கப்படும் என அமைச்சர் சொல்லியிருக்கிறார். உயர்கல்விப் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக கற்றல் பாதிப்பு ஏற்பட்டதைச் சரி செய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தைக் கொண்டு வந்தோம். அரசுப் பள்ளியில் இந்த ஆண்டு சேர்க்கை அதிகரித்திருக்கிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்றைக்கு வரை நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். அ.தி.மு.க., பா.ஜ.க என யாரையும் குறை சொல்லிக் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் எல்லா விலையும் உயரும் என்பது அடிப்படை அறிவுள்ள எல்லோருக்கும் தெரியும். தகுதி உடையவர்களுக்கு ஆய்ந்து, அறிந்து கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். வேலூரில் 1.40 கோடி கடன் வாங்கி வட்டிக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். அ.தி.மு.க காரர் ஒருவர் கவரிங் வைத்து கடன் வாங்கியிருக்கிறார். இவர்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிறார்களா? அப்படிச் செய்ய வேண்டும் என்பது அடிமுட்டாள் தனமில்லையா? இப்போதும் 5 சவரன் மட்டும் நகை வைத்த யார் வேண்டுமானாலும் வரட்டும், தகுதி உடையவர்களாக இருந்தால் உடனடியாகக் கடனை தள்ளுபடி செய்வோம். அவர்களை அ.தி.மு.க-வினரேகூட கண்டறிந்து அழைத்து வரட்டும். ஆனால், அதெல்லாம் செய்யத் தெரியாது. வீணாக விமர்சனம் மட்டும் செய்வார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

8 மாத காலத்தில் 63 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, 2.40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு யார் உருவாக்கிக்கொடுத்தது. தலைவர் தளபதிதான். பொருளாதார அறிவும் இல்லை, நிர்வாக அறிவும் இல்லாமல் கடந்த கால ஆட்சியாளர்கள் போலவா நாங்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கிறோம். சொன்னதையும் செய்திருக்கிறோம். சொல்லாததையும் செய்துகொண்டிருக்கிறோம். சாதனைமேல் சாதனை செய்துகொண்டிருக்கிறோம். பேச வேண்டும் எனச் சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் பதில் சொல்ல நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism