Published:Updated:

அமைச்சரிடம் தாய் வீட்டுச் சீதனம் கேட்ட திருத்தணி எம்.எல்.ஏ - தமிழக சட்டப்பேரவையில் சிரிப்பலை!

சட்டப்பேரவை

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரிடம் தொகுதிக்குத் தாய்வீட்டுச் சீதனம் கேட்ட சட்டமன்ற உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

அமைச்சரிடம் தாய் வீட்டுச் சீதனம் கேட்ட திருத்தணி எம்.எல்.ஏ - தமிழக சட்டப்பேரவையில் சிரிப்பலை!

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரிடம் தொகுதிக்குத் தாய்வீட்டுச் சீதனம் கேட்ட சட்டமன்ற உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

Published:Updated:
சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று தி.மு.க-வைச் சேர்ந்த திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் சட்டமன்றத்தில் பேசுகையில், ``ராணிப்பேட்டை அமைச்சர் காந்தியின் புகுந்த வீடாக இருந்தாலும், திருத்தணி சட்டமன்றத் தொகுதிதான் அவரின் தாய் வீடு. அவர் புகுந்த வீடான ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ஏராளமான சீதனங்களைக் கொடுத்திருப்பார். ஆனால், தாய்வீடு சீதனமாக எதையும் எங்கள் தொகுதிக்குக் கொடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி, தாய்வீடு சீதனமாக ஜவுளி பூங்காவை தொகுதிக்கு அளிப்பார் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று பேசினார்.

சட்டமன்ற உறுப்பினர்
சட்டமன்ற உறுப்பினர்

சட்டமன்ற உறுப்பினர் பேசி முடித்ததுமே பேரவையில் சிரிப்பலை எழுந்தது. பின்பு எழுந்து பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ``முதல்வரிடம் கலந்தாலோசனை செய்து கண்டிப்பாக நிறைவேற்றுவேன்" என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார். திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கவேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism