Published:Updated:

`டெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி!'- யார் இந்த ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா?

ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா
ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா

சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் மாஸ்டராக விளங்குபவர் எனக் காவல்துறை வட்டாரங்களில் இவரைப் பற்றிக் கூறப்படுகிறது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கடுமையான வன்முறைகள் வெடித்தன. மஜ்பூர், ஜாஃப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மோதலில் காவலர் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடந்த வன்முறைக்கு மத்தியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிறப்பு அதிகாரியாக ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா என்பவரை அரசு நியமித்துள்ளது.

டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினர்
டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினர்

யார் இந்த ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா?

1985-ன் ஐ.பி.எஸ் பேட்ஜை சேர்ந்தவர், ஶ்ரீவஸ்தவா. காஷ்மீர் பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படையின் சிறப்பு டி.ஜியாகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் டெல்லியின் நிலையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தற்போது சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்புக் காவல் ஆணையாளராக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியின் காவல்துறை தலைவராக இருக்கும் அமுல்யா பட்நாயக் விரைவில் பணி ஓய்வு பெற உள்ளதால் இவர் அடுத்த காவல்துறை தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அமுல்யா பட்நாயக்கின் பேட்ச் மேட்டாகவும் இவர் அறியப்படுகிறார்.

சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் மாஸ்டராக விளங்குபவர் எனக் காவல்துறை வட்டாரங்களில் இவரைப் பற்றிக் கூறப்படுகிறது. அஸ்ஸாம், மேகாலயா, அருணாசல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்துள்ளார். சுமார், 25 ஆண்டுகளாகக் காவல்துறையில் பணியாற்றி வரும் இவர் பயங்கரவாதத்தைக் கட்டுப்பட்டுத்த அதிக முயற்சிகள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

`நீ இந்துவா... முஸ்லிமா; ஆடையைக் கழற்று..!'- டெல்லி வன்முறையில் பத்திரிகையாளரின் `திகில்' அனுபவம்

காவல்துறையின் பல முக்கியக் பொறுப்புகளில் பணியாற்றிய இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதச் சட்டத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நபர் ஒருவரை கைது செய்து சர்ச்சையில் சிக்கினார். என்.ஐ.ஏ இந்த வழக்கு பொய்யானது என்று கூறியது. இதையடுத்து பயங்கரவாத தடுப்புப்பிரிவு தலைவர் பதவியிலிருந்து ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2011-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 2012-ம் ஆண்டு புனே மற்றும் ஜாமா மஸ்ஜித்தில் நடக்கவிருந்த குண்டு வெடிப்புகளையும் இவரது தலைமையினான குழு தடுத்தது. சுமார் 3 வருடங்களில் 37-க்கும் அதிகமான பயங்கரவாதிகளைக் கைது செய்து பல விபரீதங்களைத் தடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால்தான் டெல்லி வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா
ஐ.பி.எஸ் ஶ்ரீவஸ்தவா

ஶ்ரீவஸ்தவா சில மணி நேரங்களிலேயே பொறுப்பை எடுத்துக்கொண்டு களத்திற்கு வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சில அதிகாரிகளுடன் தலைநகரில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி அதன்படி செயல்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஜித் தோவல் கள ஆய்வு:

டெல்லியின் காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், வன்முறை நடந்த பகுதிகளான ஜஃப்ராபாத், மஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளின் நிலைமையை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். களத்தில் செய்த ஆய்வு குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் விரிவாகப் பேச உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேவையான அளவு காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளர். சட்டவிரோதமான செயல்கள் இனியும் நடக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

அஜித் தோவல்
அஜித் தோவல்

இதுதொடர்பாக அஜித் தோவல் பேசும்போது, ``காவல்துறையினர் மீது மக்கள் சந்தேகத்தில் உள்ளனர். அவர்களை மக்கள் நம்ப வேண்டும். சட்டத்தை மதிக்கும் எந்தவொரு மனிதனும் இனி பாதிப்படைய மாட்டான். மக்களிடம் உள்ள அச்சத்தை அகற்றவே நாங்கள் விரும்புகிறோம். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சபாஷ் நண்பரே.. அப்படி வாங்க!- ரஜினி கருத்துக்கு கமல்ஹாசன் வரவேற்பு #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு