Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்! விமர்சிக்கும் வார்த்தைகளுக்கு விலங்கு போடுவதா?

வார்த்தைகள்

`ஜூம்லா', `ஜூம்லாஜீவி' உள்ளிட்ட வார்த்தைகள் ட்விட்டரில் டிரெண்டாகின. அதன் பின்னரும், பல முறை `ஜும்லாஜீவி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மோடியையும், பா.ஜ.க-வினரையும் விமர்சித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

வாசகர்களுக்கு வணக்கம்! விமர்சிக்கும் வார்த்தைகளுக்கு விலங்கு போடுவதா?

`ஜூம்லா', `ஜூம்லாஜீவி' உள்ளிட்ட வார்த்தைகள் ட்விட்டரில் டிரெண்டாகின. அதன் பின்னரும், பல முறை `ஜும்லாஜீவி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மோடியையும், பா.ஜ.க-வினரையும் விமர்சித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

Published:Updated:
வார்த்தைகள்
ஜூலை 18 அன்று, நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பயன்படுத்தக்கூடாத அன்பார்லிமென்டரி வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது மக்களவை செயலகம்.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தகுதியற்ற வார்த்தைகளைத்தான் UNPARLIAMENTRY WORDS என்கின்றனர். இந்த முறை மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கும் பட்டியலில், சாதாரணமாகவும், எதிர்த்துக் கேள்வியெழுப்பவும் பயன்படுத்தக்கூடிய சில வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. அந்த வார்த்தைகள் ஏன் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறின என்ற கேள்வியும் எழுகிறது.

Parliament
Parliament

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரத்தக்களறி, அழிவுசக்தி, பயனற்றது, லாலிபாப், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல் உள்ளிட்ட வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்டிருப்பதாக மக்களவை செயலகம் அறிவித்திருக்கிறது. திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், கபட நாடகம், திறமையற்றவர், வெட்கக்கேடு, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, கழுதை, முதலைக் கண்ணீர், ரவுடித்தனம், கண்துடைப்பு, போலித்தனம், தவறாக வழிநடத்துதல், முட்டாள்தனம், குண்டர்கள் உள்ளிட்ட வார்த்தைகளும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வார்த்தைகளை யார் பயன்படுத்தினாலும், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது சபாநாயகரின் முடிவு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''இவற்றில் பெரும்பாலானவை, ஆளுங்கட்சியின் தவறுகள் குறித்து கேள்வியெழுப்பும்போது நாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள். `ஊழல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், ஓர் ஊழல் குற்றச்சாட்டை எப்படி சுமத்த முடியும்? பொய், உண்மையல்ல என்கிற இரண்டு வார்த்தைகளும் தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம், பா.ஜ.க அரசு சொல்லும் பொய்யான தரவுகள், தகவல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் யாரும் வாய்திறக்கக்கூடாது என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களா?

மக்களவை
மக்களவை

தவறாக வழிநடத்துதல், நாடகம், இரட்டை வேடம், போலித்தனம், ஏமாற்றினார், கண்துடைப்பு உள்ளிட்ட வார்த்தைகள் தடை செய்யப்பட்டிருப்பதும், மத்திய அரசு செய்யும் தவறுகளை யாருமே சுட்டிக்காட்டிவிடக்கூடாது என்ற கண்ணோட்டத்தையே தருகின்றன. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியது மத்திய பா.ஜ.க அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அதன் விளைவாகக்கூட, `ஒட்டுக்கேட்பு' என்ற வார்த்தை தடை செய்யப்பட்டிருக்கலாம்'' என்று குற்றம் சுமத்துகின்றன எதிர்க்கட்சிகள்.

`ஜூம்லாஜீவி' என்ற வார்த்தையும் தடை செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி, `ஜூம்லா' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார். அவரது பேச்சு இணையத்தில் வைரலாக, `ஜூம்லா', `ஜூம்லாஜீவி' உள்ளிட்ட வார்த்தைகள் ட்விட்டரில் டிரெண்டாகின. அதன் பின்னரும், பல முறை `ஜும்லாஜீவி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மோடியையும், பா.ஜ.க-வினரையும் விமர்சித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. `ஜூம்லா' என்றால் `பொய் வாக்குறுதி' என்று அர்த்தம்.

வார்த்தைகள்
வார்த்தைகள்

பொதுவாக, ஒரு மக்கள் மன்றத்தில் பேசக்கூடாத, முறையற்ற வார்த்தைகளைத்தான் இப்படித் தடை செய்வார்கள். ஆனால், ஆட்சியாளர்களை விமர்சிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகளையும், அவர்கள் கேட்க விரும்பாத வார்த்தைகளையும் அன்பார்லிமென்டரி வார்த்தைகளாக அறிவித்திருக்கின்றனர். விமர்சனங்களை அரசு விரும்பவில்லையோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. 'காமன்வெல்த் நாடாளுமன்றங்களின் முடிவுகளை அலசிப் பார்த்தே இதைச் செய்திருக்கிறோம். பல ஆண்டுகளாக இந்த நடைமுறை இருக்கிறது' என்று அரசு சொன்னாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளே இந்த சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகின்றன.

சர்வாதிகாரம், சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதும் ஒரு வகையில் சர்வாதிகாரம்தான். எதிர்க்கட்சிகள் எழுப்பும் வலுவான கேள்விகள்தான் ஒரு நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சாரமாக அமையும். எதிர்த்துக் கேள்வியெழுப்பப் பயன்படுத்தும் வார்த்தைகளைத் தடை செய்வது ஜனநாயகத்துக்கு அழகல்ல!